15.08.17- இன்றைய ராசி பலன்..(15.08.2017)

posted Aug 14, 2017, 6:18 PM by Habithas Nadaraja
 மேஷம்:  காலை 8.46 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதனால் வீண் டென்ஷன் வந்து செல்லும். பிற்பகல் முதல் வீண் கவலை, டென்ஷன், பயம் யாவும் நீங்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும்.  வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். தடைப்பட்ட  வேலைகள் முடியும் நாள். 

ரிஷபம்: காலை 8.46 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் பல வேலைகளையும் நீங் களே பார்க்க வேண்டி வரும். யாரையும் தூக்கி எறிந்து பேசாதீர்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக் குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும்.  உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். வேலைச்சுமை மிகுந்த நாள்.    

மிதுனம்: எதிர்பார்த்த காரியங் கள் தாமதமாக முடியும். உறவினர், நண்பர்களால் பிரச்னைகள் வரக்கூடும். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் கணிசமாக  லாபம் உயரும். உத்யோகத்தில் சக ஊழியர் களுடன் மோதல்கள் வேண்டாமே. போராடி வெல்லும் நாள்.    கடகம்:உணர்ச்சிப்பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாகப் பேசுவீர்கள், செயல்படுவீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பார்கள். சேமிக்க  வேண்டுமென்ற எண்ணம் வரும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். மாறுபட்ட  அணுகுமுறையால் வெற்றி பெறும் நாள். சிம்மம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். உறவினர்கள், நண்பர்களால் மகிழ்ச்சி தங்கும். கைமாற்றாக கொடுத்த பணத்தை  வசூலிப்பீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள்  பலிதமாகும் நாள். கன்னி:காலை 8.46 மணி வரை சந்திராஷ்டமம் இருப் பதால் எதிலும் அவசரப்பட வேண்டாம். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். விலகி  நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உடல் நலம் சீராகும். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் திருப்தி  உண்டாகும். புத்துணர்ச்சி பெருகும் நாள். துலாம்காலை 8.46 மணி முதல் சந்திராஷ்டமம் தொடர்வதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை  நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட  வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.

விருச்சிகம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். உடன்பிறந்த வர்களால் ஆதாயம் உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.  தனுசு: பணப்புழக்கம் அதி கரிக்கும். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். பிரபலங் களின் நட்பு கிட்டும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை  தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.  மகரம்:  புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர் கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை  அதிகரிக்கும். உத்யோ கத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள். கும்பம்: எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வழியில் நல்ல செய்தி வரும். தாயாருடன் வீண் விவாதம் வந்துபோகும். திடீர் சந்திப்புகள் நிகழும். தெய்வீக  ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.       


                                        

மீனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உறு துணையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில்  இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள். 
Comments