15.08.18- இன்றைய ராசி பலன்..(15.08.2018)

posted Aug 14, 2018, 6:41 PM by Habithas Nadarajaமேஷம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள். ரிஷபம்:புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள். மிதுனம்:நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். தேவைகள் பூர்த்தியாகும் நாள். கடகம்: திடமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். புது சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். வியாபாரத்தில் லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.சிம்மம்:குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். செலவுகளைக் குறைக்க திட்ட மிடுவீர்கள். நீண்ட நாள் பிரச்னை களுக்கு தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.கன்னி:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமையால் பதட்டம் அதிகரிக்கும். வீட்டிலும், வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். செலவினங்கள் அதிகரிக்கும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள். 


துலாம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். திடீர் பயணங்கள், செலவுகளால் திணறுவீர்கள். சகோதர வகையில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். 


விருச்சிகம்:குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நெருங்கிய வர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிறப்பான நாள். 
தனுசு:எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி பெறுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள். 


மகரம்:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள். கும்பம்:சந்திராஷ்டமம் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல்லது. உங்களை நீங்களே குறைத்து மதிப்பிடாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் குறைவார்கள். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.


                                        

மீனம்:பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவிவழியில் நல்ல செய்தி உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். தாயார் ஆதரித்துப் பேசுவார். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.
Comments