[Untitled]‎ > ‎

15.10.16-இன்றைய ராசி பலன்..(15.10.2016)

posted Oct 14, 2016, 7:33 PM by Habithas Nadaraja





 

மேஷம்: எடுத்த வேலையை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் சக ஊழியரின் வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். போராடி வெல்லும் நாள்.  






ரிஷபம்: சொன்ன சொல்லைக் காப்பாற்றத் துடிப்புடன் செயல்படுவீர்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.








மிதுனம்: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சியால் முன்னேறும் நாள். 








கடகம்: குடும்பத்தில் அமைதி நிலவும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். புதிய திட்டங்கள் நிறைவேறும் நாள்.







சிம்மம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள். 







கன்னி: உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். தாய்வழி உறவினர்களின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். 








துலாம்: எதிர்பாராத பணவரவு உண்டு. பேச்சைக் குறைத்து செயலில் வேகம் காட்டுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.









விருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகள் மேற்கொள்வீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். கனவு நனவாகும் நாள்.








தனுசு: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வரும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களையும் தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள். 







மகரம்: 
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்து வாங்குவது, விற்பது சாதகமாக முடியும். வியாபாரத்தில் புது யுக்திகளால் பழைய சரக்குகளை விற்றுத் தீர்ப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். வெற்றி பெறும் நாள்.







கும்பம்:  கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். தோற்றப் பொலிவுக் கூடும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.








மீனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். கோபத்தால் இழப்புகள் ஏற்படும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களுடன் சச்சரவு வரும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்..
Comments