15.11.18- இன்றைய ராசி பலன்..(15.11.2018)

posted Nov 14, 2018, 5:26 PM by Habithas Nadarajaமேஷம்:  சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கிமகிழ்வீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவல கத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்:கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வரவேண்டிய பணம் கைக்கு வரும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புதிய பாதைதெரியும் நாள். மிதுனம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. யாரை யும் பரிந்துரை செய்ய வேண்டாம். பணம் வாங்கித் தருவதில் குறுக்கே நிற்காதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள். கடகம்: உங்கள் பலம் பலவீனத்தை உணருவீர்கள். மூத்த சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல் யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும்.தாய்வழியில் மதிப்புக் கூடும். வியாபா ரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.சிம்மம்: கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். எதிர் பாராதபணவரவு உண்டு. பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபா ரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள். கன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங் களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள்.துலாம்: எடுத்த வேலையை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தரு வார்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். தாயாருக்கு வீண் டென்ஷன் வரக்கூடும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.விருச்சிகம்:  துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப் பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசாங்கத்தாலும், அதிகாரப்பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.தனுசு:அலைச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் நிம்மதி உண்டு. மனநிறைவு கிட்டும் நாள்.மகரம்:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர் கள். தன்னம்பிக்கை குறையும்.முன் கோபத்தால் பகை உண்டாகும். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.கும்பம்:எதிர்பார்த்த காரியங் கள் அலைச்சலின் பேரில் முடியும். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். வியாபா ரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு குறையும்.உத்யோகத்தில் அதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


                                        
மீனம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பிரிய மானவர்களுக்காக சில வற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை தருவார்கள். சிறப்பான நாள்.
Comments