15.12.18- இன்றைய ராசி பலன்..(15.12.2018)

posted Dec 14, 2018, 7:37 PM by Habithas Nadarajaமேஷம்:சின்ன சின்ன சந்தர்ப்பங்களையும், வாய்ப் புகளையும் பயன்படுத்திக் கொள்வீர்கள். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மதிக்கப்படு வீர்கள். சிறப்பான நாள்.
ரிஷபம்:சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப் பார். புகழ், கௌரவம் கூடும் நாள். 
மிதுனம்: உணர்ச்சிப்பூர்வ மாகப் பேசுவதை விட்டு அறிவுப்பூர்வ மாகப் பேசுவீர்கள், செயல்படு வீர்கள். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார் கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். சாதிக்கும் நாள்.  

        


கடகம்:மாலை 4 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் முன்கோபத்தை குறையுங்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். திட்டமிட்டு செயல்படு வதன் மூலம் வெற்றி பெறும் நாள்சிம்மம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். தாய்வழி உறவினர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மாலை 4 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.  
கன்னி:மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியா பாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். துலாம்:குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்யோ கத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக் கும். நினைத்தது நிறைவேறும் நாள். 
விருச்சிகம்:எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பால்ய நண்பர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள். தாழ்வுமனப் பான்மை நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள். 
தனுசு:உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.  
மகரம்:சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வந்துப் பேசுவார்கள். தோற்றப் பொலிவுக் கூடும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.    
கும்பம்: மாலை 4 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் அவ்வப்போது வருந்துவீர் கள். வியாபாரத்தில் பற்றுவரவு சுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலையிலிருந்து நிம்மதி கிட்டும் நாள். 


                                        
மீனம்:குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். எதிர்மறை எண்ணங்கள் வந்துப் போகும். வியாபாரத்தில் வேலையாட் களால் தொந்தரவுகள் வரும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வரக்கூடும். மாலை 4 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனம் தேவைப் படும் நாள். 
Comments