16.01.19- இன்றைய ராசி பலன்..(16.01.2019)

posted Jan 15, 2019, 5:02 PM by Habithas Nadarajaமேஷம்: உண்மை, நேர்மையை மதித்து செயல்படுவீர்கள். சிறிய பணியும் பலமடங்கு நன்மையை பெற்றுத் தரும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். பணம் கொடுக்கல்,வாங்கல் சீராகும். தாயின் தேவையை நிறைவேற்றி ஆசி பெறுவீர்கள்.ரிஷபம்:சொந்த நலனில் அக்கறை கொள்வீர்கள். நற்பெயரை பாதுகாக்க வேண்டும். தொழில், வியாபாரம் வளர்ச்சி பெற புதிய முயற்சி பலன் தரும். அளவான பணவரவு கிடைக்கும். உணவு ஒவ்வாமையால் அஜீரணம் ஏற்படலாம். கவனம் தேவை.மிதுனம்:சில நன்மை எளிதில் வந்து சேரும். சமூகத்தில் நன்மதிப்பு உயரும். தொழில், வியாபாரத்தில் இருந்த இடையூறு விலகும். கூடுதல் பணவரவு கிடைக்கும். பிள்ளைகள் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள்.

கடகம்: இனிய நிகழ்வுகள் மனதில் உற்சாகம் தரும். எந்த செயலையும் நேர்த்தியுடன் செய்வீர்கள். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி இலக்கு பூர்த்தியாகும். பணப்பரிவர்த்தனை திருப்திகரமாகும். விலகிய உறவினர் சொந்தம் பாராட்டுவர்.சிம்மம்: நண்பரிடம் உதவி கிடைப்பதில் தாமதம் இருக்கும். தொழில், வியாபாரத்தில் முன்னேற்றம் பெற கூடுதல் உழைப்பு அவசியம். செலவு அதிகரிக்கும். அதிக பயன்தராத பொருள் விலைக்கு வாங்க வேண்டாம்.

கன்னி: கடந்த கால இனிய அனுபவங்களை மனதில் நினைத்து செயல்படுவது நல்லது. சகதொழில் வியாபாரம் சார்ந்த எவரிடமும் சச்சரவு கூடாது. அளவான பணவரவு கிடைக்கும். ஓய்வு நேரத்தில் இசைப் பாடலை ரசிப்பதால் மனம் இலகுவாகும்.துலாம்:முன்யோசனையுடன் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு அதிக நன்மையை பெறுவர். தாமதமான காரியம் ஒன்று வளர்ச்சி நிலையை அடையும். தொழில், வியாபாரத்தில் அனுகூலம் ஒருசேர கிடைக்கும். பணவரவும் நன்மையும் அதிகரிக்கும். மாமன், மைத்துனருக்கு உதவி செய்வீர்கள்.விருச்சிகம்:மனதின் உற்சாகத்தினால் சந்தோஷ முகத்தோற்றம் பெறுவீர்கள். தொழில், வியாபாரத்தில் உருவாகிற வளர்ச்சி புதிய அனுகூலம் தரும். நிலுவைப் பணம் வசூலாகும். விவகாரத்தில் சுமுகத் தீர்வு கிடைக்கும்.

தனுசு:சிலர் உதவாத ஆலோசனை சொல்வர். செயல் குறையை சரிசெய்வதால் வாழ்வியல் நடைமுறை சீராகும். தொழிலில் கூடுதல் முயற்சியினால் உற்பத்தி விற்பனையை உயர்த்தலாம். பணவரவை விட செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ணக்கூடாது.மகரம்:சிலர் உதவுவது போல பாசாங்கு செய்வர். நம்பிக்கையுடன் செயல்படுவது நல்லது. தொழில், வியாபாரம் செழிக்க நிதான அணுகுமுறை பின்பற்ற வேண்டும். சேமிப்பு பணம் செலவுக்கு பயன்படும். வாகனத்தில் மிதவேகம் பின்பற்றவும்.கும்பம்:கடந்த காலத்தில் அவமதித்தவர் தன்குறை உணர்ந்து அன்பு பாராட்டுவர். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய சாதனை உருவாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள்.
                                        
மீனம்: செயல்திறன் கண்டு சிலர் பொறாமைபடுவர். சாத்வீக மனதுடன் செயல்படுவது நல்லது. கூடுதல் உழைப்பினால் தொழில் வியாபாரம் சீராகும். குடும்ப தேவைகளை சிக்கனமாக நிறைவேற்றுவீர்கள். பணியாளர்கள் பாதுகாப்பு தவறாமல் பின்பற்ற வேண்டும். 
Comments