[Untitled]‎ > ‎

16.03.20- இன்றைய ராசி பலன்..(16.03.2020)

posted Mar 15, 2020, 7:43 PM by Habithas Nadaraja


மேஷம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த அசதி சோர்வு நீங்கி உற்சாக மடைவீர்கள். குடும்பத்தில் அமைதி திரும்பும். அரைகுறையாக நின்றவேலைகள் முடியும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். உறவினர்
களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் .வியாபாரத்தில் தள்ளிப்போன விஷயங்கள் முடியும். புதிய திருப்பங்கள் ஏற்படும் நாள்.ரிஷபம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிக்கலான சவாலான காரியங்களையெல்லாம் கையில் எடுத்துக் கொண்டிருக்காதீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்குவதில் ஈடுபடவேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினை வரும். பொறுமைத் தேவைப்படும் நாள்.


மிதுனம்: உங்களின் அறிவாற்றலை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மைகள் உண்டு. தாயாரின் உடல் நிலை சீராகும். பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். நல்லது நடக்கும் நாள்.கடகம்: ராஜதந்திரமாக செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பழைய சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் ராஜதந்திரத்தால் லாபத்தை அதிகரிப்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள்.சிம்மம்: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். கனவு நனவாகும் நாள்.கன்னி:எதிர்பார்த்தவைகளில் சிலதள்ளிப் போனாலும் எதிர்பாராத ஒரு வேலை முடியும். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். தாயாருக்கு வீண் டென்ஷன் வந்துப் போகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நன்மை கிட்டும் நாள்.துலாம்:குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். விருந்தினர் வருகையால் வீடு களைகட்டும். வியாபாரத்தில் புகழ்பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும்.விருச்சிகம்:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். தோற்றப் பொலிவு கூடும். பணப்புழக்கம் கணிசமாக உயரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.தனுசு:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சிலரின் விமர்சனங்களுக் கும், கேலிப்பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தாரை குறை கூறி கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களால் லாபம் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய நாள்.


மகரம்:விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.கும்பம்:தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோர் நண்பர்களின் ஒத்துழைப்பு. அதிகரிக்கும். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். மதிப்புக் கூடும் நாள்.


                                        
மீனம்: உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள்.
Comments