[Untitled]‎ > ‎

16.04.19- இன்றைய ராசி பலன்..(16.04.2019)

posted Apr 15, 2019, 6:17 PM by Habithas Nadaraja


மேஷம்:குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் சில சூட்சுமங் களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள். 








ரிஷபம்: எதிர்ப்புகள் அடங்கும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் கருத்து வேறு பாடுகள் வந்து நீங்கும். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.





மிதுனம்:குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. சொந்த-பந்தங்கள் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு பல ஆலோசனைகள் தருவீர்கள். தைரியம் கூடும் நாள். 






கடகம்: குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். மனநிறைவு கிட்டும் நாள்.  







சிம்மம்:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். உறவினர், நண்பர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாற வேண்டாம். உத்யோகத்தில் ஈகோ அதிகரிக்கும். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்.






கன்னி:எதிர்பார்த்த காரியங்கள் தாமதமாக முடியும். குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. பழைய கடனைநினைத்து அவ்வப்போது கலங்குவீர்கள். யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.  






துலாம்:குடும்பத்தாரின் ஆதர வு பெருகும்.வெளியூ ரிலிருந்து மகிழ்ச்சிகரமான செய்தி வரும். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்னைகள் கட்டுப்பாட்டிற்குள் வரும். இனிமையான நாள்.  






விருச்சிகம்:எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சிறப்பான நாள். 







தனுசு: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். 







மகரம்: சந்திராஷ்டமம் நீடிப் பதால் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். மற்றவர்களுக்கு உதவி செய்யப்போய் உபத் திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம்தாமதமாக வரும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். வேலைச்சுமை மிகுந்த நாள். 







கும்பம்:பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பணவரவு திருப்தி தரும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.






                                        
மீனம்: குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக்கூடும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.  

Comments