[Untitled]‎ > ‎

16.07.18- இன்றைய ராசி பலன்..(16.07.2018)

posted Jul 15, 2018, 6:42 PM by Habithas Nadaraja



மேஷம்:புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். கடையை விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள். 







ரிஷபம்:தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதி காரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். நன்மை கிட்டும் நாள். 







மிதுனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். சகோதரங்களால் பயன டைவீர்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள். 







கடகம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவு குறையும். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள். 







சிம்மம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். முன்கோபத்தால் பகை உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. நாவடக்கம் தேவைப்படும் நாள். 







கன்னி: தேவையற்ற அலைச்சலுக்கு ஆட்படுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். பணப்பற்றாக்குறையால் பிறரிடம் கைமாற்றாக வாங்க வேண்டி வரும்.வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.







துலாம்:ஆன்மிகப் பெரியோரின் ஆசிகிட்டும். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். சிறப்பான நாள்.   







விருச்சிகம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் தள்ளிப் போன வாய்ப்புகள் தேடி வரும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.








தனுசு: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மனக்குழப்பம் நீங்கி எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.     






மகரம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளி நபர்களிடம் பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துச் செல்ல வேண்டிய நாள். 







கும்பம்:உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.   






                                        

மீனம்:பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி புதிய பொறுப்பை ஒப்படைப்பார். தொட்டது துலங்கும் நாள்.
Comments