[Untitled]‎ > ‎

16.08.18- இன்றைய ராசி பலன்..(16.08.2018)

posted Aug 15, 2018, 6:24 PM by Habithas Nadarajaமேஷம்: தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். திறமைகள் வெளிப்படும் நாள். ரிஷபம்:கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். மிதுனம்:குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். கனவு நனவாகும் நாள். கடகம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். பால்ய நண்பர்கள் உதவுவார்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள். சிம்மம்:உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். வெற்றி பெறும் நாள். கன்னி:காலை 9.40மணி முதல் மனதில் இருந்து வந்த மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். தோற்றப் பொலிவுக் கூடும். சோர்வு, களைப்பு நீங்கும். பணவரவு திருப்தி தரும். உடல் நலம் சீராகும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மகிழ்ச்சியான நாள்.    


துலாம்: காலை 9.40 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிபடுவீர்கள். நயமாகப் பேசுபவர்களை நம்ப வேண்டாம். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.விருச்சிகம்:கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். உடன்பிறந்தவர்கள் பணம் கேட்டு தொந்தரவு தருவார்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். போராடி வெல்லும் நாள்.   
தனுசு:குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.


மகரம்:உணர்ச்சிப் பூர்வமாகப் பேசுவதை விட்டு அறிவுப் பூர்வமாக செயல்படுவீர்கள். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள். கும்பம்:காலை 9.40மணி முதல் கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் அதிகாரிகள் உதவுவார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.   


                                        

மீனம்:காலை 9.40 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களுடன் போராட வேண்டி வரும். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள்.
Comments