[Untitled]‎ > ‎

16.10.19- இன்றைய ராசி பலன்..(16.10.2019)

posted Oct 15, 2019, 7:00 PM by Habithas Nadaraja


மேஷம்:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்ப தாக ஆதங்கப்படுவீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங் களைக் கற்றுக் கொள்வீர்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.






ரிஷபம்:எளிதாக முடிய வேண்டிய விஷயங்களை கூடபலமுறை போராடி முடிப்பீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சகோ தர வகையில் சங்கடங்கள் வரும். தாழ்வுமனப் பான்மை தலைத்தூக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.







மிதுனம்:வீரியத்தை விட காரியம் தான் பெரிது என்பதை உணருவீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வெளியூரிலிருந்து நல்ல செய்திவரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். பெருந்தன்மை யுடன் நடந்துக் கொள்ளும் நாள்.







கடகம்:உங்களின் அணுகு முறையை மற்றவர்களின் ரசனைக்கேற்ப மாற்றியமைத்துக் கொள்வீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். வாகனத்தை சீர் செய் வீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். உங்கள் வேலைகளை சுறுசுறுப்பாக முடித்து காட்டு வீர்கள். திட்டங்கள் நிறைவேறும் நாள்.







சிம்மம்:உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதியபாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார் கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார் கள். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.







கன்னி:சந்திராஷ்டமம் தொடர்வதால் மறதியால் பிரச்னைகள் வந்து நீங்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். முன் கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் விமர்ச னங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.





துலாம்:தன் பலம் பல வீனத்தை உணர்வீர்கள். சகோதரங்களால் பயனடை வீர்கள். திருமணப் பேச்சு வார்த்தை கைக்கூடி வரும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும். புதுநட்பு மலரும். தாயாரின் உடல் நிலைசீராகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத் தில் மேலதிகாரி உதவுவார். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.






விருச்சிகம்:குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். பிரபலங் களின் நட்பு கிடைக்கும். விருந் தினர்களின் வருகையால் வீடுகளைக்கட்டும். பயணங்களால் பயனடை வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். அமோகமான நாள்.







தனுசு:குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். சிக்கனமாக செல வழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். புதுமை படைக்கும் நாள்.







மகரம்:எதிர்பார்ப்புகள் தடையின்றி முடிவடையும். நட்பு வட்டம் விரியும். தாயாரின் உடல்நலத்தில் கவனம் தேவை. விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் அமைதி நிலவும். உயர்வு பெறும் நாள்.







கும்பம்:குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக்கொள்வீர்கள். உடன்பிறந்தவர் கள் உறுதுணையாக இருப்பார்கள். பூர்வீக சொத்து பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். விருந்தினர் வருகை அதிகரிக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும்.  தைரியம் கூடும் நாள்.





                                        
மீனம்:சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் புது முயற்சி களை ஆதரிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத் யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மனநிறைவு கிட்டும் நாள்.





                                       

Comments