[Untitled]‎ > ‎

17.03.17- இன்றைய ராசி பலன்..(17.03.2017)

posted Mar 16, 2017, 6:28 PM by Habithas Nadaraja



 
மேஷம்: மறைந்துக் கிடந்த திறமைகள் வெளிப்படும். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப் பார். இரவு 8 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் போராடி வெல்லும் நாள்.






ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர் களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர் கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். அமோகமான நாள்.







மிதுனம்: குடும்பத்தின் அடிப் படை வசதிகள் பெருகும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். நினைத்தது நிறைவேறும் நாள்.







கடகம்: நட்பு வட்டம் விரியும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாய்வழி உறவினர்களுடன் மனஸ் தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத் தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.







சிம்மம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். பிள்ளைகளால் உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் மதிக்கப்படு வீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். தைரியம் கூடும் நாள்.








கன்னி: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். புதிய பாதை தெரியும் நாள்.






துலாம்:இரவு 8 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். நண்பர்கள், உறவினர்களால் செலவினங்கள் அதிகரிக்கும். அடுத்தவர்கள் விவகாரங் களில் தலையிட வேண்டாம். உத்யோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள்.







விருச்சிகம்: குடும்பத்தின ருடன் மனம் விட்டு பேசுவது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளுங்கள். யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத் தில் போட்டிகள் இருக்கும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இரவு 8 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் கவனம் தேவைப்படும் நாள்.







தனுசு: குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். வாகன வசதிப் பெருகும். சொந்த-பந்தங்கள் தேடி வரும். புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள்.







மகரம்: சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உறவினர் கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வியாபாரத் தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.







கும்பம்: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சாதிக்கும் நாள்.







மீனம்: இரவு 8 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் அக்கம்-பக்கம் இருப் பவர்களை அனுசரித் துப் போங்கள். சிலர் உங்கள் வாயை கிளறிப் பார்ப்பார்கள். அதிகம் பேச வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். விட்டுக் கொடுத்துப் போகவேண்டிய நாள்.

Comments