[Untitled]‎ > ‎

17.04.20- இன்றைய ராசி பலன்..(17.04.2020)

posted Apr 16, 2020, 6:00 PM by Habithas Nadaraja


மேஷம்: சந்திரன் உங்க லாப ஸ்தானத்திற்கு வருகிறார். இன்று உங்களுக்கு நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுப்படும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும். இன்று யோகமான நாள் மன உளைச்சல் குறையும்.







ரிஷபம்: சந்திரன் உங்க ராசிக்கு பத்தாம் வீட்டிற்கு வருகிறார். இன்று உறவினர்கள் வருகையால் வீண் செலவுகளும் அதிகரிக்கும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் குறையும் லாபம் வரும்.







மிதுனம்:சந்திரன் உங்க ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று குடும்பத்தில் உள்ளவர்களை சற்று அனுசரித்து செல்வது நல்லது. உங்கள் ராசிக்கு பகல் 12 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகளையும் சுபகாரியங்களையும் மதியத்திற்கு பேசுவது நல்லது. கடந்த 2 நாட்களாக இருந்த பிரச்சினைகள் படிப்படியாக குறையும். பிற்பகல் வரைக்கும் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க.





கடகம்:சந்திரன் உங்க ராசிக்கு எட்டாம் வீட்டிற்கு வருவதால் இன்று குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன் ஏற்படும். உங்கள் ராசிக்கு பகல் 12 மணிக்கு பின் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் நிம்மதியில்லாத நிலை தோன்றும். வரவேண்டிய தொகை கைக்கு கிடைப்பதில் தாமதமாகும். எந்த செயலையும் நிதானமாக செய்வது நல்லது. எந்த காரணத்திற்காகவும் வீட்டை விட்டு வெளியே போயிறாதீங்க.






சிம்மம்:சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஏழாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும். இன்று நீங்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். குடும்பத்தில் சுப செலவுகள் அதிகரிக்கும் பணத்தை சிக்கனமாக செலவு செய்யுங்கள் விஐபிக்களால் நன்மை உண்டாகும். வியாபார ரீதியாக இருந்த அலைச்சல் சற்று குறையும்.






கன்னி:சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஆறாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வங்கியில் கடன் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். இன்று நீங்கள் பணப்பிரச்சினையில் இருந்து விடுபட சிக்கனமுடன் செயல்படவேண்டும். வீண் விரயங்கள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து செல்வது நல்லது.






துலாம்: சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இன்று குடும்பத்தில் ஒற்றுமை குறையும். பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். எந்த செயலிலும் நிதானம் தேவை.







விருச்சிகம்:சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு நான்காம் வீட்டிற்கு வருகிறார். இன்று வீட்டில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் நிலவும். திருமண பேச்சுவார்த்தைகளில் இருந்த தடைகள் விலகி முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வீட்டில் மன அமைதி இருக்கும். குல தெய்வத்தை கும்பிடுங்கள் சந்தோஷம் அதிகரிக்கும்.






தனுசு:சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு மூன்றாம் வீட்டில் சஞ்சரிப்பதால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இன்று குடும்பத்தில் உள்ளவர்களுடன் வீண் விவாதம் வேண்டாம். ஆடம்பர பொருட் சேர்க்கையால் கையிருப்பு குறையும். சிக்கனமாக செயல்பட்டால் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். பணம் வரும் முன்பே அதற்கான செலவுகள் வரிசை கட்டி நிற்கும்.






மகரம்: சந்திரன் இன்றைய தினம் உங்க ராசிக்கு இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். பணம் வரும் உங்க உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும்.







கும்பம்: சந்திரன் இன்றைய தினம் உங்க ராசியில் நுழைகிறார். இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும் கூடவே செலவுகளும் அதிகரிக்கும். காரணம் உங்க ராசிக்கு விரைய ஸ்தானத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். உறவினர்கள் வருகையால் செலவு வரும். பணத்தை சிக்கனமாக செலவு பண்ணுங்க. சுபகாரிய முயற்சிகளில் நிதானம் தேவை. புதிய முதலீடுகள் எதுவும் இப்போதைக்கு வேண்டாம். பேச்சில் கவனமாக இருங்க.





                                        
மீனம்: சந்திரன் இன்றைய தினம் விரைய ஸ்தானத்திற்கு வருவதால் உங்களுக்கு செலவுகள் வரிசை கட்டி நிற்கும். இன்று உங்களுக்கு சுபசெய்திகள் தேடி வரும். மனதிற்கு மகிழ்ச்சி ஏற்படும் சம்பவம் நடக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
Comments