[Untitled]‎ > ‎

17.06.19- இன்றைய ராசி பலன்..(17.06.2019)

posted Jun 16, 2019, 5:41 PM by Habithas Nadaraja


மேஷம்:பகல் 12 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எளிதாக முடிய வேண்டிய விஷயங்கள் கூட பலமுறை போராடி முடிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். திட்டமிட்டு செயல் படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள். ரிஷபம்:குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். பகல் 12 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்எச்சரிக்கை தேவைப்படும் நாள்.


மிதுனம்:பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். நாடி வந்தவர்களுக்கு உதவுவீர்கள். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் மதிப்பு மரியாதை கூடும். தொட்டது துலங்கும் நாள். கடகம்:புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். பழைய கடன் பிரச்னையில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். அலுவல கத்தில் அதிகாரிகள் ஆதரித்து பேசுவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். கனவு நனவாகும் நாள்.சிம்மம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தா லும் ஆதாயமும் உண்டு. பணப்பற்றாக் குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் பதவி உயர்வு உண்டு.  எதிர்பாராத நன்மைகள் உண்டாகும் நாள்.


கன்னி:தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். வானத்தை சீர் செய்வீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். வெற்றிக்கு வித்திடும் நாள்.


துலாம்:இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்கு வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.விருச்சிகம்:பகல் 12 மணிவரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள்.  உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் மறைமுக அவமானம் வந்து நீங்கும். மாலையிலிருந்து எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.தனுசு:திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். யாரையும் பகைத்துக் கொள்ளா தீர்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். . உத்யோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும்.  பகல் 12 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்


மகரம்:குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மற்றவர்களுக்காக சில செலவுகளை செய்து பெருமைப்படுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.


கும்பம்:எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு ஆலோசனைத் தருவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

                                        
மீனம்:குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக் கப்படுவீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புது பொருள் சேரும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். புதிய பாதை தெரியும் நாள்.
Comments