[Untitled]‎ > ‎

17.09.19- இன்றைய ராசி பலன்..(17.09.2018)

posted Sep 16, 2018, 6:49 PM by Habithas Nadarajaமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். எதிர் பார்த்த பணம் கைக்கு வரும். நட்பால்ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில் நிம்மதி உண்டு.புதிய பாதை தெரியும் நாள்.  ரிஷபம்: காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் சிக்கலான, சவா லான காரியங்களை யெல்லாம் கையில் எடுத்துக்கொண்டிருக்காதீர்கள்.சிலரின் தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். உத்யோகத்தில் அதிகா ரிகளுடன் அளவாக பழகுங்கள். சிக்கனம் தேவைப்படும் நாள்.மிதுனம்:சவாலான வேலைகளையும் சாதாரண மாக முடிப்பீர்கள். பிள்ளை களால்  மகிழ்ச்சியும், உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவரசலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோ கத்தில் பெரிய பொறுப்புகள் தேடிவரும்.திறமைகள் வெளிப்படும் நாள்.கடகம்: அனுபவ பூர்வமாகவும், அறிவுப் பூர்வமாகவும் பேசி எல்லோரையும் கவர் வீர்கள். பணப் புழக்கம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.அமோகமான நாள். சிம்மம்:குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறி வீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.கன்னி: எதிர்பார்த்தவைகளில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். உழைப்பால் உயரும் நாள்.துலாம்:குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடிவருவார். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். வெற்றிக்கு வித்திடும் நாள்.விருச்சிகம்:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனை விக்குள் இருந்த மனக் கசப்புநீங்கும். எதிர்பார்த்த இடத்தி லிருந்து உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். புது அத்தியாயம் தொடங்கும் நாள். தனுசு:காலை 9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் சிலரின் விமர்ச னங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும் யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். உத்யோகத்தில்சக ஊழியர்களைப் பகைத்துக் கொள்ளா தீர்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.மகரம்:சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். அசைவ உணவுகளை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். கும்பம்:சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள் காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள். 


                                        
மீனம்:  உங்கள் செயலில் வேகம் கூடும். திடீர் முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டி ருந்ததை வாங்கித் தருவீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். சாதித்துக் காட்டும் நாள்.
Comments