[Untitled]‎ > ‎

17.11.14- இவ் வாரத்துக்கான இராசிப்பலன் (17-11-2014முதல்23-11-2014வரை)

posted Nov 16, 2014, 11:12 PM by Unknown user
      மேஷம்

1.மேசம்:-மேசராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு வியாழன் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்17,18குடும்பத்தில் தடை பட்டு வந்த திருமண காரியங்கள் நிறைவேறும் வாய்ப்பு உள்ளது. கொடுக்க வேண்டிய பழைய கடன்களைக் கொடுத்துப் பதிய கடன்களை வாங்கத் திட்டம் போடுவீர்கள்.குடும்பச் சொத்துக்கள் போன்ற விசயத்தில் நல்ல தீர்ப்புகளை எதிர் பார்க்கலாம்.உடம்பில் உ~;ணம்,சுரம் போன்ற உபாதைகள் வந்து போகும்.நவம்பர்19,20,21குல தெய்வ ஆலயங்களைத் திருத்திக் கட்டப் போட்ட திட்டங்களில் சிறிய தடைகளின் பேரில் வெற்றி அடைவீர்கள்.இனிப்பு பொருள் வியாபாரிகள்,கம்யுட்டர்துறையை சார்ந்தவர்கள்,பழ வியாபாரிகள்,ஆலயப் பணிகள் செய்வோர்கள்,அற நிலையத் துறையை சார்ந்தவர்கள்,அநாதை ஆசிரமங்களை நடத்துவோர்கள்,பூ பழம் மற்றும் நறுமணப் பொருட்களின் வியாபாரிகள் ஆகியோர்கள் லாபம் அடைவார்கள். பண விசயங்களுக்கான நீண்ட தூரப் பயணங்களைச் சற்று தள்ளிப் போடுதல் நல்லது.ரேஸ் லாட்டரி போன்ற விசயங்களினால் பணம் கை விட்டுப் போகலாம்.நவம்பர்22,23
அடுத்தவர்களின் பிரச்சனைகளில் தலையிட்டு மனக் கவலை அடையாதீர்கள். அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமானப் பேசிப் பழகுதல் நல்லதாகும்.உத்தியோகத் துறையினர்களுக்குப் பணி இட மற்றங்கள் ஏற்படலாம்.உறவினர்கள் மற்றும் சொந்த பந்தங்களால் ஆதரவு இல்லை.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-3
இராசியான நிறம்:-மஞ்சள் 
இராசியான திசை:-வடகிக்கு
பரிகாரம்:-தட்சிணா மூர்த்தி வழிபாடு செய்து வரவும்.

        ரிசபம்

2.ரிசபம்:-ரிசபராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சுக்கிரன் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்17,18விளையாட்டுத் துறையைச் சார்ந்தவர்கள மிகவும் கவனமுடன் இருப்பது நல்லதாகும்.பொது நலக் காரியங்களுக்காக மிகுந்த அக்கரையுடன் செயல் பட்டு நற் பெயர் எடுப்பீர்கள்.சேர் மார்க்கெட் மற்றும் தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் வர்த்தகத்தில் ஈடு படுவது நல்லது. நவம்பர்19,20,21,22முன் கோபத்தை தவிர்த்து அண்டை அயலாருடன் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது. திருமண தகவல் மையங்கள், வாகனங்களில் பணியாற்றுவோர்கள்,அரசுத் துறை சார்ந்த வழக்கறிஞர்கள்,சினிமா மற்றும் நாடகத்துறையை சார்ந்தவர்கள்,
கட்டிட சம்பந்தமான பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள் ஆகியோர்கள் நற் பலன்களை அடைவார்கள்.வெகு காலமாக எதிர் பார்த்து இருந்த வங்கிகளின் மூலமாக கடன் தொகைகள் கிடைக்கும். தந்தை மகன் உறவில் சிறிய கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும்.உடம்பில் வாயு மற்றும் வயிறு ஆகிய உபாதைகள் வந்து போகும்..ஒரு சிலருக்குப் புதிய இட மாற்றம் ஏற்படக் கூடிய காலமாகும்.நவம்பர்23 குல தெய்வ வழிபாடு செய்து வருதலால் கிரக தோசங்கள் நீங்க வாய்ப்பு உள்ளது.வாடகை வீட்டில் குடி இருப்பவர்கள் புதிய வீடு மாற்றங்கள் செய்ய வாயப்பு உள்ளது. விவசாயம் செய்பவர்களுக்கு புதியமுறை விவசாயங்களால் நல்ல லாபம் அடைவார்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தராத வாரமாகும்.

இராசியான எண்:-6
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-தென்கிழக்கு
பரிகாரம்:-மஹாலட்சுமி வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

     மிதுனம்

3.மிதுனம்:-மிதுனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு ராகு நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்17நீண்ட நாட்களாக தடை பட்டு வந்த சகோதர சகோதரிகளின் திருமண காரியங்களில் வெற்றி அடைவீர்கள்.ஒரு சிலருக்கு புதிய வீடு மாற்றம் ஏற்படலாம். சமுதாய முன்னேற்றங்களுக்கும் மற்றும் ஆலய திருப்பணி செய்தல் போன்ற விசயங்களில் தலையிட்டு நற் பெயர் எடுப்பீர்கள்.நவம்பர்18,19,20திருட்டுப் போன பொருட்கள் நண்பர்களின் உதவியால் திரும்ப வீடு வந்து சேரும். உத்தியோகத் துறையினர்களுக்கு பதவி உயர்வுகள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவுகள் நிரம்ப உண்டாகும்.விவசாயம் செய்வோர்களுக்கு நல்ல விளைச்சலும், லாபமும் கிடைக்கும். புதி தொழில்களை ஆரம்பம் செய்யப் போட்ட திட்டங்களில் நல்ல தகவல்கள் வந்து சேரும்.புதிய வீடுகளை வாங்கப் போட்ட திட்டங்களுக்காக வங்கிகளில் எதிர் பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்கக் கூடிய காலமாகும்.நவம்பர்21,22,23உறவினர்களின் வரவால் பொருள் வரவும் மனச் சந்தோசமும் உண்டாகும்.பொருளாதாரம் சுமாராககாணப்படும்.எதிர் பாராத நீண்ட தூரப் பயணங்களின் மூலம் மன நிறைவடைய வாய்ப்பு உள்ளது. மீன் முட்டை மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,பழைய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள்,அணு ஆராய்சித் துறையில் பணி ஆற்றுவோர்கள்,அலு
வலக உதவிப் பணிகளைச் செய்வோர்கள் ஆகியோர்கள் நற்பலன் அடைவார்கள்.பொது
வாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-4
இராசியான நிறம்:-கருப்பு
இராசியான திசை:-வடமேற்கு
புரிகாரம்:-அம்மன் மற்றும் பிதுர் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

       கடகம்

4.கடகம்:-கடகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்17நண்பர்களின் வீட்டுச் சுப காரிய நகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன நிம்மதி அடைவீர்கள்.மஹான்களின் தரிசனங்களால் மன நிம்மதி அடைய வாய்ப்பு உள்ள காலமாகும். சுப காரிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு மன மகிழ்ச்சியை அடைவீர்கள்.நவம்பர18,19,20,21
பெண்கள் விசயத்தில் மிகுந்த எச்சரிக்கையுடன் நடந்து கொள்வது நன்று.புதிய கடன் வாங்குவதற்காக முயற்சிப்பீர்கள். பேப்பர், பேனா பென்சில் போன்ற எழுது பொருட்கள், அச்சுத்துறை சார்ந்த பொருட்கள் விற்பனையாளர்கள்,நாடகத் துறை சார்ந்தவர்கள்,கலை மற்றும் இலக்கியத் துறைகளில் பணி ஆற்றுவோர்கள்,தபால் மற்றும் தந்தித் துறை சார்ந்தவர்கள், ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.வெகு தூரப் பயணங்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் சென்று வருவது நல்லது.உடல் நிலையில் இருந்து வந்த நாட்பட்ட நோய்கள் நீங்கி மன நிம்மதி உண்டாகும்.நவம்பர்22,23புதிய பெரிய மனிதர்களையும் அரசியல் வாதிகளையும் சந்திக்க எடுத்துக் கொண்ட முயற்சிகள் வெற்றி அளிக்கும். நண்பர்களால் ஆதாயம் இல்லை.வேண்டாத விசயங்களில் தலையிட்டு வீண் பிரச்சனைகளை விலைக்கு வாங்க வேண்டாம்.மற்றவர்களுக்குக் கடன் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. பூர்வீகச் சொத்துகளில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து நல்ல சூழ் நிலை காணப்படும்.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு
பரிகாரம்:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.
 
       சிம்மம்

5.சிம்மம்:-சிம்மராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு கேது நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்17பல காலமாகத் தீராத நோய்களுக்கு புதிய மருத்துவர்களின் உதவியால் நோய் நீங்கும். ரேஸ் லாட்டரி பொன்ற சூதாட்டங்களில் மிக கவனமுடன் இருப்பது நல்லதாகும்.. வீடு நிலம் வாங்குவது போன்ற முயற்சிகளில் அரசு சம்பந்தமாக எதிர் பார்த்து வந்த உதவித் தொகைகள் கிடைக்கும்.உற்றார் உறவினர்களின் வருகையால் பொருட் செலவுகள் உண்டாகலாம்.நவம்பர்18,19தந்தை மகன் உறவுகளில் இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி ஒற்றுமை ஏற்படும்.கணவன் மனைவி உறவுகளில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி சுமூகமான சூழல் உருவாகும். சொத்து சம்பந்தமாகிய வழக்கு விசயங்களில் எதிர் பார்த்த முடிவுகள் கிடைக்கச் சற்று கால தாமதம் ஆகலாம். நவம்பர்20,21,22,23சாயப் பவுடர் வியாபாரிகள்,கூலித் தொழிற் செய்பவர்கள்,அணு ஆராய்ச்சி துறை சார்ந்தவர்கள், மீன்,முட்டை,மாமிசம் போன்ற உணவுப் பொருட்களின் வியாபாரிகள்,கழிவுப் பொருட்களின் வியாபாரிகள்,மடாதிபதிகள் மற்றும் இவற்றில் பணி ஆற்றுபவர்கள்,அலுவலக உதவிப் பணி செய்பவர்கள், ஆகியோர்கள் மிகுந்த லாபம் உண்டாக வாய்ப்பு உள்ளது. புதிய நண்பர்களின் சேர்க்கையால் காரணமற்ற பிரச்சனைகள் வந்து சேரும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும்.காதல் விசயத்தில் மிகுந்த கவனமுடன் இருத்தல் நல்லது. பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-7
இராசியான நிறம்:-கருஞ்சழகப்பு
இராசியான திசை:-வடமேற்கு 
பரிகாரம்:-விநாயகர் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

       கன்னி

6.கன்னி:-கன்னிராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்17,18கூட்டுத் தொழில் முயற்சிகளில் வெற்றி அடைவீர்கள். பொருளாதார நெருக்கடிகள் மாறித் தேவையான பொருளாதாரம் வந்து சேரும்.உடம்பில் முதுகு மற்றும் வயிறு ஆகிய உபாதைகள் வந்து போகும்.பழைய கடன்கள் மீண்டும் தொல்லை தர வாய்ப்பு உள்ளது.வெளிநாடு செல்லுதல் போன்ற முயற்சிகளில் வேற்று மதத்தவரால் எதிர் பாராத சில ஆதாயங்களை அடைவீர்கள். விபரீதமான எண்ணங்களை விட்டொழித்து காரியத்தில் கவனமாய் இருங்கள்.நவம்பர்19சொத்து சம்பந்தமாகிய வழக்கு விசயத்தில் சாதகமான நல்ல முடிவுகளை எதிர் பார்க்கலாம்.யாத்திரையின் போது புதிய பெரிய மனிதர்கள் சந்திப்பு உண்டாகி அவர்களால் காரியங்களைச் சாதித்து கொள்வீர்கள்.நவம்பர்20,21,22,23சேர் மார்க்கெட நடத்துபவர்கள்;,அரசியல் வாதிகள், அரசு உயர் அதிகாரிகள்,ஹோட்டல் தொழிற் செய்வோர்கள்,போலீஸ்,இராணுவம், தீயணைப்புத் துறைகளை சார்ந்தவர்கள்,தங்க நகை வியாபாரிகள்,கேஸ்வெல்டிங் சம்பந்தமான தொழிற்செய்வோர்கள்,பூமி மற்றும் நிலபுலன்கள் சம்பந்தமான வியாபாரிகள் ஆகியோர்கள் ஆதாயம் அடைவார்கள்.நாட் பட்ட விசா சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல முடிவுகள் கிடைப்பதற்கான காலமாகும்.கண் காதுகளில் கவனம் தேவை.மற்றவர்களுக்காக ஜாமீன் போடுவதை தவிர்க்கவும்..பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும்

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்பு
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-முருகன் வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.

       துலாம்

7.துலாம்:-துலாம் ராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு புதன் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்17,18வீடுகளைப் புதுப்பித்துக் கட்டுவதற்காக பணச் செலவுகள் வந்து சேரும்.பூர்வீக இடங்களை விட்டு மாறிச் செல்லத் திட்டம் போடுவீர்கள்.கணவன் மனைவி உறவுகள் சுமாராகக் காணப்படும்.வேற்று மதத்தவரால் ஆதாயம் இல்லை.காணாமற் போன பொருட்கள் காவல் துறையினர்களின் உதவியால் திரும்பக் கைவந்து சேரும் காலமாகும்.நவம்பர்19,20அரசு வழக்குகளில் சாதகமான நல்ல தீர்ப்புகளை எதிர் பார்க்கலாம். ஆதரவு அற்ற ஏழைகளுக்காக உதவிகள் செய்து அதனால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.உடம்பில் மூளை நரம்பு எலும்பு போன்ற உபாதைகள் வந்து போகலாம். விட்டுப் போன பழைய வழக்குகள் மீண்டும் தொடர வாய்ப்பு உள்ளது.நெடு நாட்களாகப் பிரச்சனையில் இருந்த குடும்பச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரக்கூடிய காலமாகும்..நவம்பர்21,22,23நாடகத் துறை சார்ந்தவர்கள்,கலை மற்றும் இலக்கியத் துறைகளில் பணி ஆற்றுவோர்கள்,தபால் மற்றும் தந்தித் துறை சார்ந்தவர்கள், பேப்பர், பேனா பென்சில் போன்ற எழுது பொருட்கள், அச்சுத்துறை சார்ந்த பொருட்கள் விற்பனையாளர்கள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள். விபரீத எண்ணங்களை விட்டுக் காரியத்தில் மிக கவனமாய் இருங்கள்.சூதாட்டம் போன்றகாரியங்
களில் தலையிட்டு பொருள் இழப்பு ஏற்படலாம்.உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் முன் கோபத்தை தவிர்த்துப் பணியாற்றுதல் நல்லது.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-5
இராசியான நிறம்:-பச்சை
இராசியான திசை:-வடக்கு 
பரிகாரம்:-மஹாவிஷ்ணு வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.

   விருச்சிகம்

8.விருச்சிகம்:-விருச்சிகராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சனி நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்17,18திடீர் அதிர்~;டம் மூலம் எதிர் பாராத தன வரவுகள் உண்டாகும்.பெண்களால் அவப் பெயர்கள் வரக் கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் பழகுதல் நல்லது.விவசாயம் செய்வோர்கள்,அரசியல் வாதிகள்,கலைத்துறையினர்கள் ஆதாயம் அடைவார்கள். மனைவியின் உடல் நிலையில் சிற்சில பாதிப்புகள் ஏற்படுவதன் மூலம் மருத்துவச் செலவுகள் வர வாய்ப்பு உள்ளது. மகான்களின் நல்லாசிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள்.நவம்பர்19,20,21சம்பந்தம் இல்லாத நபர்களால் எதிர் பாராத தன வரவுகள் உண்டாகலாம்.வீட்டைத் திருத்திக் கட்டுவதில் மிகுந்த அக்கரையடன் திட்டம் போடுவீர்கள்..குடும்பத்தில் தடை பட்டிருந்த சுப காரிய நிகழ்ச்சிகள் நடக்கும்.கண்களில் கவனமுடன் இருத்தல் நல்லது. புதிய தொழில் ஆரம்பம் செய்வதற்காக வங்கிகள் மூலம் எதிர் பார்த்திருந்த கடன் தொகைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.நவம்பர்22,23மாணவர்கள் கல்வியில் நல்ல மதிப்பெண்களையும் பரிசுகள் மற்றும் பாராட்டுதல்களையும் பெறுவார்கள். கழிவு பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரிகள், பலசரக்கு கடை நடத்துபவர்கள், எண்ணை வியாபாரிகள் வட்டித் தொழில்,கமிசன்,ஏஜன்சி போன்ற தொழிற் செய்வோர்கள்,இரும்பு இயந்திரம் இரசாயன சம்பந்தமான தொழிற் செய்வோர்கள், ஆகியோர்கள் நல்ல பலன் அடைவர்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-8
இராசியான நிறம்:-நீலம்
இராசியான திசை:-தென்மேற்கு
புரிகாரம்:-ஐயப்பன் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

        தனுசு

9.தநுசு:-தநுசுராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்குசந்திரன் நன்மை தரும் கிரகமாகும்..நவம்பர்17,18மற்றவர்களை நம்பிப் பணம் மற்றும் பொருட்களைக் கடன் கொடுத்து ஏமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.கணவன் மனைவி உறவில் விரிசல்களும் வீண் மனக் குழப்பங்களும் வந்து போகும்.நீண்ட நாட்களாக வராத பணம் கை வந்து சேரக் கூடிய காலமாகும்.உறவினர்களால் வீண் பொருட் செலவுகள் உண்டாகும்.நவம்பர்19,20மற்றவர்களை நம்பி பணம் பொருள் கடன் கொடுத்து ஏமாற்றம் அடைய வேண்டாம்.கூட்டுத் தொழிற் செய்வோர்கள் முன் கோபத்தைத் தவிர்ப்பது சிறந்ததாகும்.தாயின் உடல் நிலையில் பாதிப்புகள் உண்டாகுவதோடு மருத்துவச் செலவுகள் ஏற்படும்.பொருளாதாரத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து நிம்மதி அடைவீர்கள். ஆடம்பர அலங்காரப் பொருள் வியாபாரிகள் ஆதாயம் அடைவார்கள். புதிதாக வீடு, வாகனம் மற்றும் நில புலன்கள் வாங்க வாய்ப்பு உள்ளது. திருமணம் போன்ற சுப காரிய நிகழ்சிகளுக்காக நீண்ட தூரப் பயணங்களை மேற் கொள்வீர்கள். நவம்பர்21,22,23பிள்ளைகளுக்கு எதிர் பார்த்து வந்த வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.. தண்ணீர் கூல்டிரிங்ஸ் மற்றும் திரவ சம்பந்தமான பொருட்களின் வியாபாரிகள், பூஜைப் பொருட்களின் வியாபாரிகள்,மருத்துவத் துறையைச் சார்ந்தவர்கள்,மருந்து வியாபாரிகள், ஜவுளி மற்றும் நூல் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் அடைவார்கள்.பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-அம்மன் ஆலய வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

        மகரம்

10.மகரம்:-மகரராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சூரியன் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்17;,18நண்பர்களால் வீண் விவாதங்களும் தொல்லைகளும் வந்து போகும். பொருளாதார நெருக்கடிகள் ஏற்பட்டாலும் மிகுந்த பிரயாசையின் பேரில் சமாளித்துக் கொள்வீர்கள்.யாத்திரையில் கவனம் தேவை.வராத கடன் கொடுத்துள்ள பணம் எதிர் பாராமல் திரும்பக் கிடைக்கும்.காதல் சம்பந்தமான விசயங்களில் எதிர் பார்த்த நல்ல தகவல்கள் வந்து சேரலாம்.நவம்பர்19,20வெகு காலமாக கணவன் மனைவியின் உறவுகளில் இருந்து வந்துள்ள பிரச்சனைகள் தீர்ந்து சுமூகமான உறவுகள் ஏற்படும்.புதிய கூட்டுத் தெழில் முயற்சிகளை சற்று கால தாமதமாக தொடங்குவது நல்லது.உடம்பில் தோல் மற்றும் ரத்த சம்பந்தமாகிய பிணிகள் வந்து போகும். குடும்பத்தில் தாய் தந்தையர்களின் உடல் நிலையில் பாதிப்புகள் ஏற்பட்டு மருத்துவத்திற்காக வெளியுர் பயணங்களை மேற் கொள்வீர்கள்.நவம்பர்21,22,23 ஆசிரியர்கள்,வக்கீல் தொழிற் செய்வோர்கள் இரசாயனம்,அரசுத்துறை சார்ந்த உயர் பதவி வகிப்பவர்கள்,வெளி நாட்டுத் தூதுவர்கள்,கோதுமை போன்ற தானியங்களின் உணவுப் பொருள் வியாபாரிகள் லாபம் அடைவார்கள். எதிர் பாராமல் வட திசையில் இருந்து பொருள் வரவும், நல்ல செய்திகளும் வந்து சேரும். மற்றவர்களின் விசயங்களில் தலையிட்டு மன நிம்மதியை இழக்க வேண்டாம். உத்தியோகத் துறையினருக்குப் பணி இட மாற்றங்கள் மற்றும் பதவி உயர்வுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ள காலமாகும்.
பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். 

இராசியான எண்:-1
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-கிழக்கு
பரிகாரம்:-சிவ வழிபாடு செய்து அன்னதானம் செய்து வரவும்.

      கும்பம்

11.கும்பம்:-கும்பராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு சந்திரன் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்17,18தீராத நாட் பட்ட நோய்களுக்கு விடை காணுவீர்கள். மூத்த சகோதரர்களால் பொருட் செலவுகள் வந்து சேரும்.உத்தயோகத் துறையினருக்கு இட மாற்றமும் பதவி உயர்வுகளும் வரக் கூடும்.நீண்ட காலமாக புதிய கட்டிடம் கட்டப் போட்ட திட்டங்கள் நிறைவேறும்.ரேஸ்,லாட்டரி போன்றவற்றின் மூலம் திடீர் தனவரவு உண்டாகும்.நவம்பர்19,20,21குடும்பத்தில் திருமணம் போன்ற சுப காரிய நிகழச்சிகள் நடைபெற வாய்ப்பு உள்ளது. விசா பிரச்சனைகள் தீருவதற்கான வாய்ப்புகள் உள்ள காலமாகும்.தண்ணீர் கூல்டிரிங்ஸ் மற்றும் திரவ சம்பந்தமாகிய பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரிகள்,தங்கம் வெள்ளி போன்ற நகை வியாபாரிகள்,பூஜைப் பொருள் வியாபாரிகள்,கோதுமை போன்ற தானிய வியாபாரிகள்,மருந்துப் பொருட்களை உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் வியாபாரிகள்,ஜவுளி நூல் வியாபாரிகள் ஆகியோர்கள் நல்ல லாபம் பெறுவார்கள்.நவம்பர்22,23உற்றார் மற்றும் உறனர்களிடம் இருந்த எதிர் பார்த்த காரியங்கள் நிறைவேறும். காதல் விசயத்தில் எதிர் பார்த்திருந்த நல்ல செய்திகள் வந்து சேரும். குல தெய்வ வழிபாட்டிற்காக துலை தூரப் பயணங்களை மேற் கொள்ள நேரும்.பொதுப் பணிகளில் ஈடு பட்டு நற் பெயர் எடுக்க வாய்ப்பு உள்ளது. அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் மிகவும் கவனமாகப் பேசிப் பழகுதல் நல்லது.பொதுவாக இது ஒரு சுமாரான நற்பலன் தரும் வாரமாகும். 

இராசியான எண்:-2
இராசியான நிறம்:-வெள்ளை
இராசியான திசை:-மேற்கு
பரிகாரம்:-அம்மன் வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும்.

        மீனம்

12.மீனம்:-மீனராசி அன்பர்களே இந்த வாரம் உங்களுக்கு செவ்வாய் நன்மை தரும் கிரகமாகும்.நவம்பர்17,18சொத்து சம்பந்தமாகிய வழக்கு விசயங்களில் நல்ல முடிவுகள் ஏற்படும்.பிள்ளைகளால் எதிர் பாராத சிற்சில ஆதாயங்களை அடைய வாய்ப்பு உள்ளது.எதிர் பார்த்த பண உதவிகள் உறவினர்களால் கிடைக்கும்.காணாமற் போன பொருட்கள் திரும்ப கிடைக்கும்.தீர்த்த யாத்திரைகளுக்காக நீண்ட தூரப் பிரயாணங்களை மேற் கொள்ளுவீர்கள்.நவம்பர்19,20,21சேர் மார்க்கெட் நடத்து பவர்கள்;, அரசியல் வாதிகள், அரசு உயர் அதிகாரிகள்,ஹோட்டல்தொழிற் செய்வோர்கள்,போலீஸ்,இராணுவம்,
தீயணைப்பு துறைகளைச் சார்ந்தவர்கள்,தங்க நகை வியாபாரிகள், காரமான உணவுப் பொருட்களை ஏற்றுமதி இறக்குமதி செய்வோர்கள்,ஹோட்டல் பணி செய்பவர்கள் ஆகியோர்கள் ஆதாயம் அடைவார்கள்.போட்டி லாட்டரி மூலமாகத் திடீர் தன வரவுகள் உண்டாகும். யாத்திரைகளில் மிகுந்த கவனமுடன் சென்று வருதல் நல்லதாகும்.திருமண விசயங்களுக்காக முயற்சி செய்யலாம்.நவம்பர்22,23அநாதைகளுக்கு உதவுவதில் மனமகிழ்ச்சி அடைவீர்கள்.உடல் நிலையில் வாயு மற்றும் வாதம் ஆகிய தொல்லைகள் வந்து போகும்.அண்டை அயல் வீட்டுக்காரர்களுடன் முன் கோபம் தவிர்த்துப் பேசிப் பழகுதல் நல்லதாகும்.ஒரு சிலருக்கு சம்பந்தமில்லாத நபர்களால் சில ஆதாயங்கள் வநது சேரலாம். கூட்டுத் தொழில் முயற்சிகளைத் தொடங்கினால் நல்ல பலன்கள் கிடைக்கும்.
பொதுவாக இது ஒரு நற்பலன் தரும் வாரமாகும்.

இராசியான எண்:-9
இராசியான நிறம்:-சிகப்ப
இராசியான திசை:-தெற்கு
பரிகாரம்:-துர்க்கை வழிபாடு செய்து அன்ன தானம் செய்து வரவும். 

தொடரும்!
                                                                                    நன்றி : ஞானயோகி : டாக்டர். ப.இசக்கி  IBAM, RMP,DISM
        தமிழ்நாடு, இந்தியா

Comments