[Untitled]‎ > ‎

17.11.18- இன்றைய ராசி பலன்..(17.11.2018)

posted Nov 16, 2018, 5:11 PM by Habithas Nadarajaமேஷம்:  தன்னம்பிக் கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். சபைகளில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். சிறப்பான நாள்.ரிஷபம்:உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.மிதுனம்: கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நட்புவழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப் பார்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். உற்சாகமான நாள்.  


கடகம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பொறுமைத் தேவைப்படும் நாள். 


சிம்மம்: பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். மனைவி வழியில் உறுதுணையாக இருப்பார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோ கத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக் கைகள் நிறைவேறும். திறமைகள் வெளிப் படும் நாள்.கன்னி:  பணப்புழக்கம் அதிகரிக்கும். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றைவிட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அமோகமான நாள். துலாம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள். விருச்சிகம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியா பாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.தனுசு:குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். உறவினர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். நினைத்ததை முடிக்கும் நாள்மகரம்:குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். செலவுகளைக் குறைக்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங் களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோ கத்தில் மேலதிகாரி மதிப்பார். மனநிறைவு கிட்டும் நாள்.கும்பம்:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் திணறுவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.


                                        
மீனம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். உடல் நலம் பாதிக்கும்.வியாபாரத் தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோ கத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். போராடி வெல்லும் நாள்.
Comments