[Untitled]‎ > ‎

17.11.19- இன்றைய ராசி பலன்..(17.11.2019)

posted Nov 16, 2019, 5:54 PM by Habithas Nadaraja


மேஷம்: குடும்பத்தினருடன் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். தைரியமாக சில முடிவுகளை எடுக்கும்நாள்.







ரிஷபம்: குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். புதிய நண்பர்களால் மகிழ்ச்சி யான நிலை உருவாகும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். விசேஷங்களை  முன்னின்றுவியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்தி யோகத்தில் இழந்த உரிமையைப் பெறுவீர்கள். மகிழ்ச்சியான நாள்.







மிதுனம்:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில விமர்சனங்களுக்கும், கேலி பேச்சிற்கும் ஆளாவீர்கள். யாரையும், யாருக்கும் நீங்கள் சிபாரிசு செய்ய வேண்டாம். நீங்கள் நகைச்சுவைக்காக சொல்லக்கூடிய சில விஷ யங்கள் சீரியஸாக வாய்ப்பு இருக்கிறது. வியா பாரத்தில் இழப்புகள் ஏற்படும். திட்டமிட்டுச் செயல்படவேண்டிய நாள்.







கடகம்:சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்கவேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்து கொள் ளுங்கள். வியாபாரத் தில் ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து போங்கள். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.







சிம்மம்:தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள் பெற்றோர்களின் விருப்பங் களை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் பாராட்டப் படுவீர்கள். சிந்தனைத்திறன் பெருகும் நாள்.







கன்னி:உங்களின் அணுகு முறையை மற்றவர்களுக்காக மாற்றி கொள்வீர்கள். உடன் பிறந்த வர்கள் உங்கள் வேலையைப் பகிர்ந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் உங்களின் ஆலோசனை ஏற்கப்படும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். நன்மை நடக்கும் நாள்.







துலாம்:கணவன் மனைவிக்குள் அன்னியோன்யம் அதிகரிக்கும். வரவேண்டிய பணம் கைக்கு வந்து சேரும். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் மதிப்பார்கள். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.







விருச்சிகம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் மன இறுக்கங்கள் உருவாகும். வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. நயமாகப் பேசுபவர்களை நம்பவேண்டாம். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். உத்தியோகத்தில் மேல் அதிகாரி குறை கூறுவார். சகிப்புத்தன்மை தேவைப்படும் நாள்.






தனுசு:கடினமான காரியங்களையும் சாதாரணமாக முடிப் பீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. கல்யாண பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும். வியாபாரத்தில் அதிரடியாக மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.







மகரம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். எதிர்பாராத தனவரவு உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் புது யுக்திகளைக் கையாண்டு லாபம் அடைவீர்கள். உத்தியோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றி பெறும் நாள்.







கும்பம்:குடும்பத்தில் உங்கள் கைஓங்கும். சிக்கனமாகச் செலவழித்துச் சேமிக்கத் தொடங்கு வீர்கள். நண்பர்களின், அண்டை அயலார்களின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகம் ஆவார்கள். உத்தியோகத்தில் திருப்திகரமான நிலை உருவாகும். நினைத்தது நிறைவேறும் நாள்.






                                        
மீனம்:எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை.புதிய வேலை வாய்ப்பு அமையும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.
Comments