[Untitled]‎ > ‎

17.12.20- இன்றைய ராசி பலன்..(17.12.2020)

posted Dec 16, 2020, 5:50 PM by Habithas Nadaraja
  • மேஷம்: உங்கள் செயலில் வேகம் கூடும். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வேற்றுமதத்தவரின் உதவி கிடைக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில்  தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதித்து காட்டும் நாள்.

  • ரிஷபம்:கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். அவசரத்திற்கு கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.

  • மிதுனம்:சந்திராஷ்டமம் இருப்பதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்ய போய் உபத்திரவத்தில் சிக்கிக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மற்றவர்களின் வேலையையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். நிதானம் தேவைப்படும் நாள்.


  • கடகம்:உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக்கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை  பிறக்கும் நாள்.
  • சிம்மம்: குடும்பத்தினருடன் சுபநிகழ்ச்சிகளில் நடந்து கொள்வீர்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சில புதுமையை செய்து எல்லோரின் கவனத்தையும் ஏற்பீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.
  • கன்னி: புதிய முயற்சிகள் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலையை அறிந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள்.  நினைத்ததை நிறைவேறும் நாள்.

  • துலாம்:  எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு கை, கால் வலி வந்து நீங்கும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில்  சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கினாள்.

  • விருச்சிகம்:சவால்கள், விவாதங்களில் வெற்றி பெற்றுவீர்கள். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.


  • தனுசு: குடும்பத்தில் இருப்பவர்களால் நிம்மதி உண்டு. இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

  • மகரம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை, தாமதங்கள் ஏற்படும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைக்கழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.

  • கும்பம்:மறைமுக விமர்சனங்களும் தாழ்வுமனப்பான்மையும் வந்து செல்லும். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.

  • மீனம்: கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். சகோதரர்களால் பயனடைவீர்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள். உத்தியோகத்தில் தைரியமாக முக்கிய முடிவு எடுப்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.

Comments