[Untitled]‎ > ‎

18.02.17- இன்றைய ராசி பலன்..(18.02.2017)

posted Feb 17, 2017, 6:40 PM by Habithas Nadaraja 
மேஷம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். மதியம் 12.50 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.


ரிஷபம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தொட்டது துலங்கும் நாள்.மிதுனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.கடகம்: பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். கடனை தீர்க்க புது வழி பிறக்கும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பாராத உதவி கிட்டும் நாள்.சிம்மம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவு கள் எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சவாலில் வெற்றி கிட்டும் நாள்.
கன்னி: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டு. உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். நிம்மதியான நாள்.


துலாம்மதியம் 12.50 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். சொந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. வர வேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலையில் குழப்பம் நீங்கி தெளிவு பிறக்கும் நாள்.விருச்சிகம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர்களால் அலைச் சல், டென்ஷன் வந்துப் போகும். வாகனத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். மதியம் 12.50 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.தனுசு: குடும்பத்தினரின் எண்ணங்களைக் கேட்ட றிந்து பூர்த்தி செய்வீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். இனிமையான நாள்.
மகரம்: தன்னம்பிக்கையுடன் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். உடன் பிறந்தவர்களின் பிரச்னையை தீர்த்து வைப்பீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துவீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திடீர் யோகம் கிட்டும் நாள்.


கும்பம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன் யம் பிறக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். வாகனப் பழுது நீங்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உற்சாகமான நாள்.மீனம்: மதியம் 12.50 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் பழைய நினைவுகளில் மூழ்குவீர்கள். வெளி வட்டாரத்தில் பெரிய பொறுப்புகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை குறையும். மாலையில் தடைகள் நீங்கும் நாள்.

Comments