posted Feb 17, 2021, 5:52 PM by Habithas Nadaraja
 தனுசு: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.
 மகரம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். புது வேலை அமையும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்தியோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.
 கும்பம்: குடும்பத்தில் ஒற்றுமைபிறக்கும். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். தைரியமான முடிவுகளை எடுக்கும் நாள்.
 மீனம்:கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு ,சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். புதிய பாதை தெரியும் நாள்.
|
|