[Untitled]‎ > ‎

18.03.20- இன்றைய ராசி பலன்..(18.03.2020)

posted Mar 17, 2020, 6:35 PM by Habithas Nadaraja


மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்பும் ஆதரவும் அதிகரிக்கும். அவசரத்திற்கு வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். நட்பு வட்டம் விரியும். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். அதிரடி மாற்றம் உண்டா கும் நாள்.








ரிஷபம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் மன இறுக்கம் வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் வளைந்துக் கொடுத்துப்போவது நல்லது. விமர்சனங்களை கண்டு அஞ்சாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்சினை வரும். உத்தியோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.






மிதுனம்:  உங்கள் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது  பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.







கடகம்:குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசாங்க விஷயங்கள் நல்ல விதத்தில் முடியும். வழக்கில் திருப்பம் ஏற்படும். உத்தியோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.







சிம்மம்:புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகள் குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். அனாவசிய செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். உத்தியோகத்தில் ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.







கன்னி:எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாயாருக்கு கை கால் வலி சோர்வு வந்து நீங்கும். பழைய சிக்கல்களை தீர்ப்பீர்கள். வரவேண்டிய பணத்தை போராடி வசூலிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.







துலாம்:உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன் பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் எதிர்பாராத தனலாபம் உண்டு. உத்தியோகத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். வெற்றிபெறும் நாள்.







விருச்சிகம்: இதுவரை இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். அழகும் இளமையும் கூடும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.







தனுசு:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதம் ஏற்படும். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.






மகரம்:எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். திடீர் பயணங்கள் உண்டு. அரசு காரியங்கள் தாமதமாக முடியும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.







கும்பம்:ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வேற்று மதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் கமிஷன், ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். இனிமையான நாள்.






                                        
மீனம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தருவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதித்துக் காட்டும் நாள்.

Comments