[Untitled]‎ > ‎

18.07.18- இன்றைய ராசி பலன்..(18.07.2018)

posted Jul 17, 2018, 6:56 PM by Habithas Nadaraja



மேஷம்:சமயோஜிதமாகவும், சாதுர்யமாகவும் பேசி சாதிப்பீர்கள். பழைய உறவினர், நண்பர்களை சந்திப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். 







ரிஷபம்:மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். கனவு நனவாகும் நாள். 







மிதுனம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். நன்மை கிட்டும் நாள்.  







கடகம்: தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். பிள்ளைகளால் புகழ், கௌரவம் உயரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.  







சிம்மம்: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த  பிரச்சனைகள் நீங்கி நிம்மதி உண்டாகும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். தடைகள் உடைபடும் நாள்.   







கன்னி: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். அடுத்தவர்களை குறைக் கூறுவதை நிறுத்துங்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.







துலாம்:மற்றவர்களை நம்பி முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பிள்ளைகளிடம் பரிவாகப் பேசுங்கள். அரசு காரியங்கள் இழுபறியாகும். சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் விவாதம் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.







விருச்சிகம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள். 








தனுசு: உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்புணர்ந்து செயல் படுவார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். 






மகரம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மோதல்கள் விலகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். உற்சாகமான நாள்.  







கும்பம்:சந்திராஷ்டமம் தொடங்குவதால் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும். குடும்பத்தில் சிறு வார்த்தைகள் கூட பெரிய தகராறில் போய் முடியும். நெருங்கியவர்கள் சிலரால் தர்மசங்கடமான சூழ்நிலைக்கு ஆளாவீர்கள். உத்யோகத்தில் கூடுதலாக வேலைப் பார்க்க வேண்டி வரும். விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாள். 






                                        

மீனம்:உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.
Comments