[Untitled]‎ > ‎

18.11.18- இன்றைய ராசி பலன்..(18.11.2018)

posted Nov 17, 2018, 7:27 PM by Habithas Nadaraja



மேஷம்:சில காரியங்களை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்வீர்கள்.சாலைகளை கவனமாக கடந்துச் செல்லுங்கள். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில்  மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள். 







ரிஷபம்: தவறு செய்பவர் களை தட்டிக் கேட்பீர்கள். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள்.வியாபாரத்தில்வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில்உங்களின்  புது முயற்சிகள் பலிதமாகும். சிந்தனைத் திறன்பெருகும் நாள்.







மிதுனம்:திட்டமிட்ட காரி யங்கள் கைக்கூடும். பிள்ளை கள் நீண்ட நாட்களாக கேட்டுக் கொண்டிருந்ததை வாங்கித் தருவீர்கள். உங்களால் பயன டைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தில் சில  தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதிக்கும் நாள்.







கடகம்:காலை 9 மணி முதல்  கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி  செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.







சிம்மம்: காலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். அதிக வேலைச்சுமையால் அவ்வப்போது கோபப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலை  யாட்களால் விரயம் வரும். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள். 







கன்னி:எதையும் தன்னம்பிக்கையுடன் செய்யத் தொடங்குவீர்கள். மனைவி வழியில் ஆதரவுப் பெருகும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நன்மை கிட்டும் நாள். 







துலாம்:கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். உறவினர், நண்பர்கள் உங்க ளுக்குமுக்கியத்துவம் தருவார்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி  உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார். திடீர் யோகம் கிட்டும் நாள். 







விருச்சிகம்: குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். உங் களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். கடையை  விரிவுப்படுத்துவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். புதுமை படைக்கும் நாள். 







தனுசு:கடந்த கால சுகமான அனுபவங்களெல்லாம் மனதில் நிழலாடும். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். வெளிவட் டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். வியாபா ரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில்  சூழ்ச்சிகளை முறியடிப் பீர்கள். தேவைகள் பூர்த்தியாகும் நாள். 







மகரம்:உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்களின் பிரச் னையை தீர்த்து வைப்பீர்கள். அதிகாரப் பதவியில் இருப்ப வர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம்  செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார்.தைரியம் கூடும் நாள். 







கும்பம்: காலை 9 மணி முதல் சோர்வு நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர் களின் ஆதரவுக் கிட்டும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் பணிகளை  விரைந்து முடிப்பீர்கள். அதிரடி மாற்றம் உண்டாகும் நாள்.






                                        
மீனம்:காலை 9மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் திடீர்திடீரென்று எதையோ இழந்ததைப் போல் இருப்பீர்கள். சிலரின் தவறு களை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவு களில் சிக்குவீர்கள். சிறுசிறு ஏமாற்றங்கள்  ஏற்படக்கூடும். உத்யோகத்தில் அதிகாரி களுடன் பனிப்போர் வந்து நீங்கும். சிக்கனம் தேவைப்படும் நாள்.
Comments