[Untitled]‎ > ‎

18.12.16- இன்றைய ராசி பலன்..(18.12.2016)

posted Dec 17, 2016, 4:58 PM by Habithas Nadaraja



 

மேஷம்: நீங்கள் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர் களால் உங்களுக்கு வீண் செலவுகள் வந்து போகும். பழைய கடனை தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.





ரிஷபம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு நீங்கள் மதிப்பளிப்பீர்கள். பிரபலங்கள் உங்களுக்கு அறிமுகமாவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களால் நன்மை உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். தைரியம் கூடும் நாள்.







மிதுனம்: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். பழைய பிரச்னைகளுக்கு உங்களின் மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். புதியவரின் நட்பால் உற்சாக மடைவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.








கடகம்:   மாலை 6 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் பல வேலை களையும் இழுத்துப் போட்டு பார்க்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். வளைந்து கொடுக்க வேண்டிய நாள். 







சிம்மம்: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. வெளிவட்டாரத்தில் விமர்சனங்களை தவிர்க்க பாருங்கள். வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை சமாளிப்பீர்கள். மாலை 6 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.









கன்னி: எதிலும் வெற்றி பெறுவீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நீங்கள் நிறைவேற்றுவீர்கள். உங்களுக்கு பிரியமானவர் களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.





துலாம்சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் வரும். உடன்பிறந்தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.








விருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். புதிய யோசனைகள் பிறக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரம் செழிக்கும். புதிய பாதை தெரியும் நாள்.







தனுசு: மாலை 6.00 மணி வரை சந்திராஷ்டமம் தொடர் வதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். சிலரின் தவறான செயல்களை எண்ணி வருந்துவீர்கள். வியாபாரத்தில் லாபம் மந்தமாக இருக்கும். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.








மகரம்: 
பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். மாலை 6,00 மணி முதல் சந்திராஷ்டமம் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.

.
  



கும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நீங்கள் நிறைவேற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப் பவர்கள் அறிமுகமாவார்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். அனுபவ அறிவால் சாதிக்கும் நாள்.







மீனம்: குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உறவினர்களின் அன்புத் தொல்லை குறையும். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. கனவு நனவாகும் நாள்.

Comments