[Untitled]‎ > ‎

19.01.18- இன்றைய ராசி பலன்..(19.01.2018)

posted Jan 18, 2018, 5:17 PM by Habithas Nadaraja




மேஷம்:உங்கள் போக்கில் கொஞ்சம் மாற்றம் செய்வீர்கள். உடன்பிறந்தவர்கள் பாசமழை பொழிவார்கள். நெருங்கியவர்கள் சிலருக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள். 







ரிஷபம்:எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வெளிவட்டாரத்தில் மதிப்புக் கூடும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புதுப்  பொறுப்புகள் தேடி வரும். முயற்சிகள் பலிதமாகும் நாள். 







மிதுனம்:மதியம் 1.27 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வதால் சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டி வரும்.  சொந்த-பந்தங்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில்  எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். சிக்கனம் தேவைப்படும் நாள்






கடகம்:குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மதியம் 1.27 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.  







சிம்மம்:வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பழைய உறவினர்கள், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் உயரதிகாரி சில  சூட்சுமங்களை சொல்லித் தருவார். தொட்டது துலங்கும் நாள்.  







கன்னி: குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும்.  கனவு நனவாகும் நாள்.







துலாம்:எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். தாழ்வுமனப்பான்மை நீங்கும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில்  மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள். 







விருச்சிகம்:குடும்பாத்தாருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். தைரியம் கூடும் நாள்.  







தனுசு:இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். சொந்த-பந்தங்கள் வீடு தேடி வருவார்கள். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.  







மகரம்: மதியம் 1.27 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் புது முதலீடுகளை தவிர்க்கவும். கணவன் -மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து  நீங்கும். பணம், நகையை கவனமாக கையாளுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார் தான். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது  நல்லது. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.






கும்பம்:   குடும்பத்தினருடன் விவாதங்கள் வந்து போகும். அநாவசிய செலவுகளை தவிர்க்கப் பாருங்கள். உறவினர்களுடன் கருத்து மோதல்கள் வரும்.  வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும். மதியம் 1.27 மணி முதல் ராசிக்குள் சந்திரன் செல்வதால் எதிலும் கவனம்  தேவைப்படும் நாள். 






                                        

மீனம்:பெரியோரின் ஆசி கிட்டும். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். மனசாட்சி படி செயல்படும் நாள்.
Comments