[Untitled]‎ > ‎

19.04.20- இன்றைய ராசி பலன்..(19.04.2020)

posted Apr 18, 2020, 6:48 PM by Habithas Nadaraja


மேஷம்:சில வேலைகளை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகளால் டென்ஷன் ஏற்படும். உடல் அசதி சோர்வு வந்து நீங்கும். பணப்பற்றாக்குறையை சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். சிக்கனம் தேவைப் படும் நாள்.
ரிஷபம்:எதையும் சமாளிக்கும் மனப்பக்குவம் கிடைக்கும். சகோதரர்களால் பயனடைவீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுப்பாட்டிற்குள் வரும். பயணங்கள் சிறப்பாக அமையும். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடும். உத்தியோகத்தில் எதிர்ப்புகள் அடங்கும். புகழ் பெறும் நாள்.மிதுனம்:சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மனதிற்கு மகிழ்ச்சி தரும்செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். கடமை உணர்வு வெளிப்படும் நாள்.

கடகம்:கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். பழைய பிரச்சினைகளுக்கு புதிய அணுகுமுறையில் எளிதாக தீர்வுகாண்பீர்கள். விருந்தினர்களின் வருகையால் வீடுகளை கட்டும். புதிய நட்புகள்கிடைக்கும். வியாபாரத்தில் புதிய தொடர்புகளால் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் செல் வாக்கு கூடும். தடைகள் விலகும் நாள்.


சிம்மம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தில் உள்ளவர்கள் உங்கள் நிறை குறைகளை எடுத்து சொன்னால் கோபப்படாதீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பேசுங்கள். உத்தியோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.


கன்னி:உங்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப் பார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். விருந்தினர்கள் வருகை அதிகரிக்கும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். நன்மை நடக்கும் நாள்.


துலாம்: வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர் நண்பர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புதுஒப்பந்தம் செய்வீர்கள். உத்தியோகத்தில் உங்களின் புதிய முயற்சிகள் பலிதமாகும். துணிச்சலால் வெற்றி பெறும் நாள்.விருச்சிகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.தனுசு:பழைய பிரச்சினைகளுக்கு சுமூக தீர்வு கிடைக்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும்.வியாபாரத்தில் சந்தை ரகசியங்களை தெரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் நிம்மதி கிட்டும். தடைகளை தாண்டி வெல்லும் நாள்.


மகரம்: தைரியமாக சில முக்கியமுடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் கமிஷன் ஸ்டேஷனரி வகைகளால் லாபமடைவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் நினைப்பதை முடித்து காட்டுவீர்கள். ஊக்கம் அதிகரிக்கும் நாள்.கும்பம்: குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கிசந்தோஷம் மலரும். அரைகுறை யாக நின்ற வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெறுவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரி மதிப்பார். புதிய பாதை தெரியும் நாள்.


                                        
மீனம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் பல விஷயங்களையும் நீங்களே பார்க்கவேண்டி வரும். முக்கிய விஷயங் களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்தியோகத்தில் மறதியால் பிரச்சினைகள் வந்து போகும். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.
Comments