[Untitled]‎ > ‎

19.08.20- இன்றைய ராசி பலன்..(19.08.2020)

posted Aug 18, 2020, 6:51 PM by Habithas Nadaraja


மேஷம்:நீண்ட நாட்களாக பார்க்க நினைத்த ஒருவரை சந்திப்பீர்கள். தாயாருடன் கருத்து மோதல்கள் வந்து நீங்கும். பணப்பற்றாக்குறை நீடித்தாலும் கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் அமைதி நிலவும். உழைப்பால் உயரும் நாள்.







 
ரிஷபம்:குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபா ரத்தில் பழைய சரக்குகள் விற்று தீரும். உத்தி யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவு பெரு கும். நினைத்ததை முடிக்கும் நாள்.








மிதுனம்:கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். தோற்றப் பொலிவு கூடும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். எதிர்பார்த்த உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் அனைவரும் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.








 கடகம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்து போகும். வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்து போவது நல்லது. வியாபா ரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள்.








சிம்மம்:எளிதில் முடிந்து விடலாம் என நினைத்த காரியங்கள் கூட இழுபறியாக போய் முடியும். எதிர்மறை எண்ணங்கள் வந்து செல்லும். வியாபாரத்தில் அவசர முடிவுகள் வேண்டாம். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.








கன்னி:
தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். பெற்றோர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். சாதிக்கும் நாள்.








துலாம்:சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உங்களிடம் பழகும் நண்பர்கள் உறவினர் களின் பலம் பலவீனத்தை உணர் வீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரை தருவார்கள். கடமை உணர்வுடன் செயல்படும் நாள்.







விருச்சிகம்: குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி மகிழ்ச்சி உண்டாகும். எதிர்பார்த்த பணம் கைக்கு வந்து சேரும். புதியவரின் நட்பால் ஆதாயமடைவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் புதிய சூட்சுமங்களை உணர்வுகள். உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். மாற்றங்கள் ஏற்படும் நாள்.








தனுசு:சந்திராஷ்டமம் இருப்பதால் அடுக்கடுக்கான வேலைகளால் அவதிக்கு உள்ளாவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் வளைந்து கொடுத்து போவது நல்லது. வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டி வரும். பொறுமை தேவைப் படும் நாள். 








மகரம்:கடினமான  வேலைகளையும் மாறுபட்ட அணுகுமுறையால் முடித்து காட்டுவீர்கள் சகோதர வகை யில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதக மாக முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் வரும். உத்தியோகத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள் நல்லன நடக்கும் நாள். 








கும்பம்:பணப்புழக்கம் அதிகரிக் கும். உறவினர்கள் நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுகொள்வார்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். உற்சாகமான நாள். 







                                        
மீனம்:குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வெளியூரி லிருந்து நல்ல செய்தி வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புதிய வாடிக்கை யாளர்கள் தேடி வருவார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.
Comments