[Untitled]‎ > ‎

19.09.19- இன்றைய ராசி பலன்..(19.09.2019)

posted Sep 18, 2019, 6:55 PM by Habithas Nadaraja


மேஷம்:பிற்பகல் 2 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் உங்களுடைய பலம் எது பலவீனம் எது என்று நீங்கள் உணர்ந்து கொள்வது நல்லது. உங்களின் அணுகுமுறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மாலைப் பொழுதிலிருந்து எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும் நாள்.






ரிஷபம்:வெளிவட்டாரத்தில் வீண் வாக்குவாதம் வந்து போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். குடும்பத்தினருடன் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் சிலர் உதவி கேட்டு நச்சரிப்பார்கள். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும்.   







மிதுனம்:குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். சபைகளில் மதிக்கப்படுவீர் கள். நம்பிக்கைக்குரியவரை கலந்தா லோசித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வாகன வசதி பெருகும். வியாபாரம் தழைக்கும். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். இனிமையான நாள்.  







கடகம்:சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உடன்பிறந்தவர்களின் விருப்பங் களை நிறைவேற்றுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். மனைவிவழியில் உதவிகள் உண்டு. வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும்.  







சிம்மம்: உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். சிலருக்கு உதவிகரமான செயல்களை செய்வீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் அதிகாரியின் நம்பிக்கையை பெறுவீர்கள். 







கன்னி:பிற்பகல் 2 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கடந்த காலத்தில் கிடைத்த நல்ல வாய்ப்புகளையெல்லாம் சரியாக பயன்படுத்தாமல் விட்டுவிட்டோமே என்றெல்லாம் அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். இரண்டாவது முயற்சியில் சில காரியங்கள் முடியும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது.






துலாம்:கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வரும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாய்வழி உறவினர்களால் ஆதாயமடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி உதவுவார். பிற்பகல் 2 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள். 






விருச்சிகம்:கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளை களின் பொறுப்புணர்ந்து செயல்படுவார்கள்.  நம்பிக்கைக்குரியவரை சந்தித்து எதிர்காலம் குறித்து சில முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள்.







தனுசு:குடும்பத்தின் அடிப் படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூ பத்தை புரிந்து கொள்வீர்கள். நட்பால் ஆதாயம் உண்டு. நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் மதிக்கப் படுவீர்கள். புதுமை படைக்கும் நாள்.







மகரம்:திர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். பிள்ளைகளால் ஆறுத லடைவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் மதிப்பார்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். நன்மை கிட்டும் நாள்.








கும்பம்:குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். பேச்சில் முதிர்ச்சி தெரியும். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும்.





                                        
மீனம்:சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். பிள்ளைகளின் புது முயற்சிகளை ஆதரிப்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும்
Comments