[Untitled]‎ > ‎

19.10.18- இன்றைய ராசி பலன்..(19.10.2018)

posted Oct 18, 2018, 6:51 PM by Habithas Nadaraja



மேஷம்:  மனதில் உற்சாகம் நிலைத்திருக்கும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி உருவாகும். உபரி வருமானத்தால் சேமிப்பு உயரும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்வு வந்து சேரும். பெண்கள் இஷ்ட தெய்வ வழிபாடு சிறப்பாக நடத்துவர்.







ரிஷபம்: மனதில் சிறுகுழப்பம் ஏற்பட்டு மறையும். நவீன மாற்றத்தால் தொழில், வியாபாரத்தில் வளர்ச்சி காண்பீர்கள். பணவரவு சீராகும். வெகுநாள் காணாமல் தேடிய பொருள் விடாமுயற்சி யால் கிடைக்கும். பெண்கள் குடும்பநலனுக்காக பாடுபடுவர்.







மிதுனம்: எவருக்கும் தேவையற்ற வாக்குறுதி தர வேண்டாம். தொழில், வியாபாரத்தில் இடையூறுகளை தாமதமின்றி சரி செய்யவும். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாகலாம். பணவரவு சீராக இருக்கும். வெளியூர் பயணத்தில் திடீர் மாற்றம் ஏற்படலாம்.







கடகம்: சமயோசிதமான செயலால் நன்மை காண்பீ்ர்கள். தொழிலில் வளர்ச்சி அதிகரிக்கும். நிலுவைப்பணம் வசூலாகும். உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி கூடும். அரசியல்வாதிகள் பதவி பெற அனுகூலம் உண்டு. பெண்கள் ஆடை, ஆபரணம் வாங்குவர்.







சிம்மம்:உங்கள் வாழ்வில் கூடுதல் வளம்பெற புதிய வாய்ப்பு உருவாகும். தன்னம்பிக்கையுடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை கிடைக்கப் பெறுவர். பெண்கள் தேவைகளை தாராள செலவில் நிறைவேற்றுவர்.







கன்னி:உங்களின் நற்செயலை சிலர் பரிகாசம் செய்யலாம். தொழில், வியாபாரம் செழிக்க விடாமுயற்சி தேவைப்படும். பணவரவு மிதமாக இருக்கும். சொத்து, ஆவணம் பிறர் பொறுப்பில் தரக் கூடாது. வாகனத்தில் மிதவேகம் பின்பற்றுவது நல்லது.







துலாம்:பரபரப்புடன் பணியாற்றுவீர்கள். தொழில்,வியாபாரம் சார்ந்த குறைகளை சரிசெய்வ தால், எதிர்பார்த்த வளர்ச்சி உருவாகும்.சிறு அளவில் கடன் வாங்க நேரிடலாம். பணியாளர்கள் பணிச்சுமைக்கு ஆளாவர். பெண்களுக்கு பிள்ளைகளின் நற்செயல் ஆறுதல் அளி்கும். 







விருச்சிகம்: மனதில் தெய்வ நம்பிக்கை மேலோங்கும். தொழிலில் தேவையான மூலதனத் துடன் அபிவிருத்திப்பணி செய்வீர்கள். ஆதாயம் அதிகரிக்கும்.உறவினர்க்கு கொடுத்த வாக் குறுதியை நிறைவேற்றுவீர்கள். பெண்கள் விருந்து விழாவில் கலந்து கொள்வர்.







தனுசு:உறவினரின் பேச்சால் அதிருப்தி கொள்வீர்கள். தொழில், வியாபாரத்தில் திட்டமிட்ட பணிகளில் தாமதம் ஏற்படலாம். பணவிஷயத்தில் விழிப்புடன் இருக்கவும். பணியாளர்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்தவும். பெண்கள் பிறர் விஷயத்தில் தலையிட வேண்டாம். 







மகரம்:எதிர்கால வளர்ச்சிநோக்கில் புதிய திட்டம் உருவாக்குவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சியால் பணவரவு அதிகரிக்கும். பணியாளர்கள் சலுகை பெற்று மகிழ்வர். பெண்கள் வீட்டு உபயோகப்பொருள் வாங்குவர். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும்.







கும்பம்:  மனதில் குழப்பம் ஏற்பட்டு மறையும். தொழில், வியாபாரத்தில் சுமாரான லாபம் இருக்கும். அவசர தேவைகளுக்கு சேமிப்பு பணம் கரையும். பணியாளர்கள் பணியை விரைந்து முடிப்பர். பெண்களுக்கு உடல்நலனில் அக்கறை அவசியம். 






                                        
மீனம்: தடைகளை முறியடிக்க புதிய உத்திகளை கையாள்வீர்கள். தொழிலில் உற்பத்தி, விற்பனை சிறக்கும். லாபம் உயரும். பணியாளர்களுக்கு நிர்வாகத்திடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். பெண்கள் மனம் போல ஆடை, ஆபரணம் வாங்குவர்.
Comments