[Untitled]‎ > ‎

19.10.20- இன்றைய ராசி பலன்..(19.10.2020)

posted Oct 18, 2020, 6:08 PM by Habithas Nadaraja



மேஷம்:உங்களின் திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் ஆதரவு பெருகும். உத்தியோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். தன்னம்பிக்கை துளிர் விடும் நாள்.







 
ரிஷபம்:எதிர்பார்த்திருந்த தொகைகைக்கு வரும். உறவினர் நண்பர்களால் ஆதாயமுண்டு. வழக்கில் வெற்றி பெறுவீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்தியோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். அமோகமான நாள்.








மிதுனம்:புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிட்டும். புதுமை படைக்கும் நாள்.








கடகம்:எதிர்ப்புகள் அடங்கும். நட்பு வட்டம் விரியும். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். உத்தியோகத்தில் சலுகைகளை அறிவிப்பீர்கள். உழைப்பால் உயரும் நாள்.








சிம்மம்:உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். அரசால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள் லாபத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் சில  நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.








கன்னி:
கடந்த இரண்டு நாட்களாக குடும்பத்தில் இருந்து வந்த கூச்சல் குழப்பம் விலகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள்தேடி வரும். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள்.









துலாம்:ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வேலைச்சுமையால் பதற்றம் அதிகரிக்கும். அநாவசியமாக மற்றவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பொறுமைத் தேவைப் படும் நாள்








விருச்சிகம்:திட்டமிட்ட காரியத்தை அலைந்து திரிந்து முடிக்க வேண்டி வரும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். அரசாங்க விஷயம் தாமதமாகும். வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் விவாதம் வேண்டாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.








தனுசு:ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மத்தியில் பாராட்டப்படுவீர்கள். சிறப்புமிகுந்த நாள்.








மகரம்:நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். வாகன வசதிப் பெருகும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். சாதிக்கும் நாள்.









கும்பம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த மன உளைச்சல் நீங்கி தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உத்தியோகத்தில் திருப்தி உண்டாகும். உற்சாகமான நாள்.








                                        
மீனம்:சந்திராஷ்டமம் இருப்பதால் அவசர முடிவுகள் எடுக்காமல் இருப்பது நல்லது. நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் தவறாகபோய் முடியும். யாருக்கும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். உத்தியோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.
Comments