[Untitled]‎ > ‎

20.05.19- இன்றைய ராசி பலன்..(20.05.2019)

posted May 20, 2019, 1:52 AM by Habithas Nadaraja


மேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமை இருந்துக் கொண்டேயிருப்பதாக ஆதங்கப்படுவீர்கள். உதவிக் கேட்டு உறவினர்களும் தர்மசங்கடத்திற்கு ஆளாக்குவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்க வேண்டாம். உத்யோகத்தில் சக ஊழியர்களைப் பற்றிக் குறைக்கூற வேண்டாம். பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள்.







ரிஷபம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில்சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.






மிதுனம்:குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள்.







கடகம்:மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அலுவலகத் தில் மரியாதைக் கூடும். நினைத்தது நிறைவேறும் நாள்.







சிம்மம்:எடுத்த வேலைகளை முடிக்காமல் ஓயமாட்டீர்கள். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் ஏற்படக் கூடும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். மனதிற்கு இதமான செய்தி வரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியா பாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும்.உழைப்பால் உயரும் நாள்.






கன்னி:குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். சொந்த-பந்தங்களில் சிலர் கேட்ட உதவியை செய்வீர்கள். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். மனோபலம் கூடும் நாள்.







துலாம்:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். தோற்றப்பொலிவுக் கூடும். புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். தடைப்பட்ட வேலை கள் முடியும் நாள்.






விருச்சிகம்:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எதிர்பார்த்தவை தாமதமாக முடியும். குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். நீங்கள் சிலருக்கு நல்லது சொல்லப் போய் பொல்லாப்பாக முடியும். வியாபாரத்தில் வேலையாட்களை பகைத்துக்கொள்ளாதீர்கள். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். முன் கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.






தனுசு:அநாவசியச் செலவுகளை குறைக்கப்பாருங்கள். திடீர் பயணங்கள் இருக்கும். உணவில் காரம்,வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர பகைவரக்கூடும். வியாபாரத்தில் பாக்கிகளை கறாராகப் பேசி வசூலிப்பீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் விவாதம் வேண்டாம். கடினமாக உழைக்க வேண்டிய நாள்.







மகரம்:சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உதவிகேட்டு வருபவர்களுக்கு உங்களாலானவற்றை செய்து கொடுப்பீர்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ் தர்களை சந்திப்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.







கும்பம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உறவினர், நண்பர்கள் உங்களிடம் முக்கிய விஷயங்களை பகிர்ந்துக் கொள்வார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார் கள். உத்யோகத்தில் அதிகாரி களுக்கு ஆலோசனைத் தருவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.





                                        
மீனம்:கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். கை மாற்றாக வாங்கி யிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். சாதிக்கும் நாள்.
Comments