[Untitled]‎ > ‎

20.08.18- இன்றைய ராசி பலன்..(20.08.2018)

posted Aug 19, 2018, 6:36 PM by Habithas Nadarajaமேஷம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனதில் இனம்புரியாத பயம் வந்துப் போகும். கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். எதார்த்தமாக நீங்கள் பேசுவதைக் கூட சிலர் தவறாகப் புரிந்துக் கொள்வார்கள். சிலர் உதவுவதை போல் உபத்திரவம் தருவார்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரையம் வரும். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.


ரிஷபம்: சவாலான காரியங்களையும் செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாண பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். தாயாரின் உடல் நிலை சீராகும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத் தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோ கத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். நன்மை கிட்டும் நாள். மிதுனம்:குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். வழக்கில் வெற்றி பெறுவீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். தொட்டது துலங்கும் நாள். கடகம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத்தது நிறைவேறும் நாள்.   சிம்மம்:புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத் தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணரு வீர்கள். உழைப்பால் உயரும் நாள்.  கன்னி:சவால்கள், விவா தங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபல மாக இருப்பார்கள். அரசாங் கத்தாலும், அதிகாரப் பதவி யில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.     


துலாம்:இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் அனுகூலமும் உண்டு. எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். நவீன மின்னணு சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். மனசாட்சி படி செயல்படும் நாள். 


விருச்சிகம்:ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் இனந்தெரியாத சின்ன சின்ன கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடியுங்கள். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். பேச்சில் இங்கிதம் தேவைப்படும் நாள்.தனுசு:குடும்பத்தில் சின்ன சின்ன விவாதங்கள் வந்து நீங்கும். வாகனத்தை இயக்கும் போது அலைப்பேசியில் பேச வேண்டாம். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. சகோதர வகையில் சங்கடங்கள் வரும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. அதிகம் உழைக்க வேண்டிய நாள்.  

மகரம்:எதையும் தாங்கும் மனவலிமை கிட்டும். தாய்வழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். சபை களில் மதிக்கப்படுவீர் கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுக மாவார்கள். புதுத் தொழில் தொடங்கு வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். புகழ், கௌரவம் கூடும் நாள். 
கும்பம்:உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற் கான வழியை யோசிப்பீர் கள். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்துப் பேசுவார்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். மாறுட்ட அணுகுமுறையால் முன்னேறும் நாள்.                                          

மீனம்:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். பழைய பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் ஏற்பட்ட இழப்புகளை சரி செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கிகாரம் கிடைக்கும். உற்சாகமான நாள்.
Comments