[Untitled]‎ > ‎

20.11.16- இன்றைய ராசி பலன்..(20.11.2016)

posted Nov 19, 2016, 5:59 PM by Habithas Nadaraja




 

மேஷம்: எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். தாய்வழி உறவினர் களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.
 

     
.  



ரிஷபம்: குடும்பத்தில் உள்ள வர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பீர். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை நீங்கள் சந்திக்க நேரிடும். வீடு, மனை வாங்குவது விற்பது லாபகரமாக அமையும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். நினைத்ததை முடிக்கும் நாள்.







மிதுனம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வெளியூரில் இருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் வேலையாட்கள் உதவுவார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.


  




கடகம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சில வேலைகளை நீங்களே முடிப்பது நல்லது. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளி போகும். திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.


 




சிம்மம்: குடும்பத்தைப் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. உறவினர், நண்பர்களுடன் கருத்து மோதல்கள் வரக்கூடும். உடல் அசதி, சோர்வு வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு செய்யலாம். அதிகம் உழைக்க வேண்டிய நாள்.







கன்னி: குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து நீங்கள் பூர்த்தி செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். சில வேலைகளை விட்டுக் கொடுத்து முடிப்பீர்கள். எங்குச் சென்றாலும் உங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும். வியாபாரம் செழிக்கும். இனிமையான நாள்.







துலாம்:பிரச்னைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நீங்கள் வாங்கியிருந்த பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். மதிப்புக் கூடும் நாள்.








விருச்சிகம்: குடும்பத்தி னருடன் மனம் விட்டுப் பேசுவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். புதியவரின் நட்பால் உற்சாகமடைவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உற்சாகமான நாள்.







தனுசு:சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச் சுமை இருந்து கொண்டேயிருப் பதாக ஆதங்கப்படுவீர்கள். சிலர் உங்களை மட்டம் தட்டிப் பேசினாலும் உணர்ச்சி வசப்படாதீர்கள். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்க வேண்டிய நாள்.







மகரம்: 
தன்னம்பிக்கையுடன் எதையும் செய்யத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் உங்கள் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். மனைவிவழியில் ஆதரவுப் பெருகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். நன்மை கிட்டும் நாள்.





கும்பம்: குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்று வீர்கள். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். எதிர்பாராத இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதுத் தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். தொட்டது துலங்கும் நாள்.








மீனம்:  புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். உங்கள் பிள்ளைகளின் உயர்கல்வி குறித்து நீங்கள் யோசிப்பீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். கனவு நனவாகும் நாள்.
Comments