[Untitled]‎ > ‎

20.12.16- இன்றைய ராசி பலன்..(20.12.2016)

posted Dec 19, 2016, 5:18 PM by Habithas Nadaraja



 

மேஷம்: குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். புது தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் அமைதி நிலவும். புதுமை படைக்கும் நாள். 





ரிஷபம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். தாய் வழி உறவினர்களுடன் மனஸ் தாபம் வந்து நீங்கும். பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோக த்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.  
    






மிதுனம்: துணிச்சலாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன் பிறந் தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். அரசால் ஆதா யம் உண்டு. வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். தைரியம் கூடும் நாள். 







கடகம்: இங்கிதமானப் பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத் துவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்களால் ஆதா யம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். புத் துணர்ச்சி பெருகும் நாள். 







சிம்மம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் மனஇறுக்கங்கள் உருவாகும். அதிக வேலைச்சுமையால் கோபப்படுவீர்கள். தர்மசங்கடமான சூழ்நிலைகளில் அவ்வப்போது சிக்கித் தவிப்பீர்கள். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் சின்ன சின்ன இடர்பாடுகளை சமாளிக்க வேண்டியிருக்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.







கன்னி: சில வேலைகளை அலைந்து, திரிந்து முடிக்க வேண்டி வரும். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் மேலதிகாரியால் பிரச்னைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.   





துலாம்:திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் வாடி க்கையாளர்களின் ரசனையைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மதிப்புக் கூடும் நாள். 







விருச்சிகம்: நீண்ட நாள் ஆசையில் ஒன்று நிறைவேறும். உறவினர், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். நெருங்கிய வர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தை பெருக்கு வீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். சாதிக்கும் நாள். 






தனுசு: குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக் கப்படுவீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுப டுவீர்கள். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்யோகத்தில் உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவார்கள். புதிய பாதை தெரியும் நாள். 







மகரம்: சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே ஒருவித படபடப்பு, தாழ்வுமனப் பான்மை வந்துச் செல்லும். நண்பர்கள், உறவினர்களுடன் உரிமையில் வரம்பு மீறிப் பேச வேண்டாம். உங்கள் மீது சிலர் வீண் பழி சுமத்துவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். வளைந்துக் கொடுக்க வேண்டிய நாள். 

  


கும்பம்: உற்சாகமாக எதை யும் செய்யத் தொடங்குவீர் கள். பிள்ளைகள் பொறுப்பு ணர்ந்து செயல்படுவார்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். நன்மை கிட்டும் நாள். 







மீனம்:  குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளுக்கு மதிப் பளிப்பீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். அரசால் அனுகூலம் உண்டு. விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். திடீர் யோகம் கிட்டும் நாள்.
Comments