[Untitled]‎ > ‎

2013 மே மாதம் 31ம் திகதி விஜய வருட குரு மாற்றம்..

posted May 31, 2013, 11:51 AM by Web Team -A
மேடம்: இவர்களின் இளைய சகோதரத்துக்கு நல்ல பலன் உண்டாகும். பல வழிகளில் நன்மை 
      சேரும். களத்திர நன்மைகள் ஏற்படும். திருமண வாழ்க்கை கிட்டும். பொருள் வரவு நன்றாக           
               அமையும். சேமிப்பும் உண்டாம்.  தந்தைக்கு நற்பலன் உண்டாகும் கஸ்டங்கள் விலகும்.


இடபம்: இவர்களுக்கு தேகசுகம் நன்றாக அமையும். மரணபயம் நீங்கும். தொழில் நன்றாக அமையும்
     தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். தனதாணிய விருத்தி நன்கமையும். 


மிதுனம்: இவர்களுக்கு ஜென்மகுரு நடைபெற இருப்பதால் சொல்ல முடியாத கஸ்டங்கள் ஏற்படும்.
                  ஆறு மாதத்திற்குப்பின் ஒரளவு நன்மை ஏற்படும். மேலும் தொழில் நன்றாக அமையும்
       தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். புத்திரபலன் நன்கமையும். புதிய ஜீவன் உருவாகும்.
       திருமணவாழ்க்கை கிட்டும். தந்தைக்கு நற்பலன் உண்டாம்.


கர்கடகம்: இவர்களுக்கு செலவு கட்டுக்கடங்காமல் போகும். பலவழிகளில் செலவு ஏற்படும். தேக
       சுகம் பாதிக்கப்படும். பெரும்பாலும் சுவாசம் சம்பந்தமான அஸ்மா, மூச்சுத்திணறல்,
       ஞாபக மறதி என்பன துன்பம் தரும். மரணபயமும் ஏற்படும்.தந்தை வழியில் செலவுகள் 
       ஏற்படும்.


சிங்கம்:  இவர்களுக்கு இம்மாற்றம் நல்ல பலனைக் கொடுக்கும். புத்திரபலன் நன்கமையும். புதிய 
                   ஜீவன் உருவாகும். திருமணவாழ்க்கை கிட்டும். இளைய சகோதரத்துக்கு நல்ல பலன் 
       உண்டாகும். மரணபயம் நீங்கும். வரவு நன்றாக அமையும். சேமிப்பும் உண்டாம்.


கன்னி:  இவர்களுக்கு தொழிலில் கஸ்டங்கள் ஏற்படும். வசதி குறைந்த இடத்துக்கு மாற்றம் ஏற்படும்.
      தனதாணிய விருத்தி நன்கமையும். தேகசுகம் நன்றாக அமையும். தாய்க்கு நற்பலன் உண்டாம்


துலாம்: இவர்களுக்கு தேகசுகம் பாதிக்கப்படும். பெரும்பாலும் சுவாசம் சம்பந்தமான அஸ்மா, 
      மூச்சுத்திணறல், ஞாபக மறதி என்பன துன்பம் தரும். புத்திரபலன் நன்கமையும். இளைய 
      சகோதரத்துக்கு நல்ல பலன் உண்டாம்.
 

விருச்சிகம்: இவர்களுக்கு அட்டமத்து குரு நடப்பதால் வாழ்க்கை கஸ்டம் நிறைந்தாக காணப்படும்.
        பலவிதமான துன்பம், அலைச்சல், பொருட்செலவு என்பன காணப்படும். வாழ்க்கையில் 
        விரக்தி ஏற்படும். மரணபயம் ஏற்படும். தனதாணியவிருத்தி நட்டம் ஏற்படும். புத்திரர் 
        பற்றிய கவலை ஏற்படும். மணமாகாதோர் முறை தவற இடமுண்டு. 


தனு : இவர்களுக்கு நல்ல பலன் உண்டாகும். பல வழிகளில் நன்மைகள் வந்து சேரும். வாழ்க்கை 
     சந்தோசமாக அமையும்.


மகரம்: இவர்களுக்கு தேகசுகம் பாதிக்கப்படும். பெரும்பாலும் சுவாசம் சம்பந்தமான அஸ்மா, 
     மூச்சுத்திணறல், ஞாபக மறதி என்பன துன்பம் தரும். பொருட் செலவு அதிகமாகும். 
     செலவு கட்டுக்கடங்காமல் போகும். பலவழிகளில் செலவு ஏற்படும். 
 

கும்பம்: இவர்களுக்கு தனதாணியவிருத்தி, பொருள் வரவு நன்றாக அமையும். சேமிப்பு உண்டு. 
      புத்திரர் பலன் நன்கமையும். தந்தைக்கு நற்பலன் உண்டாம். 


மீனம்: இவர்களுக்கு நல்ல பலன் உண்டாம். தொழில் நன்றாக அமையும். தொழிலில் முன்னேற்றம் 
     ஏற்படும். மரணபயம் நீங்கும். தாய்க்கு நற்பலன் உண்டாம். 


மேலதிக விபரங்கள் விஜய புதுவருட விடயத்தில் பார்வையிடலாம். இவை பொதுவான பலன் மட்டுமே. இதை விட லக்கினத்துக்கும் பலன் அறிவதன் மூலமே முழுமையான பலனை அறியலாம். எனவே லக்கினத்துக்கும் பலனை அறிந்து கொள்ளுங்கள்.
                        நன்றி.
 
                          கருணாகரம்பிள்ளை ரவீந்திரன்
                            கருத்துக்களுக்கு: 0775073347


Comments