[Untitled]‎ > ‎

21.04.20- இன்றைய ராசி பலன்..(21.04.2020)

posted Apr 20, 2020, 6:31 PM by Habithas Nadaraja


மேஷம்:எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். வரவிருக்கும் ஆபத்து நீங்கும். பேச்சில் நிதானம் தேவை. போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. கற்பனைத் துறையை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.ரிஷபம்:மனக்கட்டுப்பாடு அவசியம் தேவை. எதையும் தீர விசாரித்தால் மட்டுமே நல்ல முடிவு ஏற்படும். பிறரிடம் மன்னிப்பு கேட்கும் நிலை வராதபடி விழிப்புடன் இருப்பது நல்லது. பிரியமானவரிடம் பேசி உற்சாகம் பெறுவீர்கள். நண்பர்கள் ஆதரவுக்கரம் நீட்டுவார்கள்.மிதுனம்: தேவையில்லாத விவகாரங்களில் தலையிட வேண்டாம். குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடுவதை
விரும்புவீர்கள். வெளிநாடுகளுக்கு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். தாயின் ஆசி பெறுவீர்கள். வீட்டில் சுபநிகழ்ச்சிகள்
நடப்பதற்கான சூழல் உருவாகும்.


 கடகம்:பெற்றவர்களின் மீது வைத்திருக்கும் அன்பை வெளிக்காட்டி அவர்களுக்கு மகிழ்ச்சியளிப்பீர்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். பணியிடத்தில் மேலதிகாரியிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். காதல் திருமணம் கைகூடும்.சிம்மம்:எல்லோரிடமும் அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். வரவிருக்கும் ஆபத்து நீங்கும். பேச்சில் நிதானம் தேவை. போட்டித் தேர்வுகளுக்கு படிப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் உண்டு. கற்பனைத் துறையை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.கன்னி:
மனதில் புதிய நம்பிக்கை பிறக்கும். உடல்நலத்திற்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம். அரசுபணியில் உள்ளவருக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. வழக்குகளில் சிக்கியிருப்போர் அதிலிருந்து மீளுவார்கள். எதிர்பாராத நிகழ்வுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள்.துலாம்: வாகனம் வாங்கும் யோகம் உள்ளது. கணவன் மனைவி புரிதலில் சற்று சிரமம் ஏற்படலாம். குடும்பப் பிரச்னைகளை எளிதில் சமாளிப்பீர்கள். உணவில் கட்டுப்பாடு தேவை. ஆன்மிக நம்பிக்கை அதிகமாகும். மற்றவர்களை ஏளனமாக எண்ண வேண்டாம்.விருச்சிகம்:எடுத்த செயல்களில் வெற்றி கிடைக்கும். மனதில் புதுவிதமான மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். நண்பர்களை நன்கு புரிந்து கொள்ளும் வாய்ப்பு அமையும். உறவினர்களுக்கு இயன்ற அளவில் உதவி செய்வீர்கள். பொழுதுபோக்கில் ஆர்வம் கூடும்.தனுசு:குடும்பத்தில் சிறிய அளவில் சலசலப்பு ஏற்படும். கணவன் மனைவி உறவில் சிறு அளவிலான உரசல் உண்டாகும். பணியிடத்தில் வெற்றி வந்தே தீரும். வாழ்க்கை தித்திப்பாக அமையும். பல நாட்கள் இழுத்துக் கொண்டிருக்கும் வழக்குகள் முடிவு பெறும்.மகரம்:அரசு பணி கிடைக்க வாய்ப்புள்ளது. சமூகத்தில் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள். யாருக்காகவும் உங்கள் உரிமைகளை வீட்டுக் கொடுக்க மாட்டீர்கள். வீண் விவாதங்களைத் தவிர்க்க வேண்டும். மாணவர்கள் படிப்புடன் கலைகளையும் ஆர்வமாக பயில்வர்.கும்பம்: மனதில் புதிய நம்பிக்கை வளரும். சரியான நேரத்தில் எடுக்கும் முடிவுகள் பல வகையில் நன்மை தரும். பல நாட்கள் தள்ளிப்போன செயல்கள் நல்லபடியாக முடியும். வருமானம் திருப்திகரமாகும். குலதெய்வ வழிபாடு இனிதே நிறைவேறும்.


                                        
மீனம்: உதவி செய்தவர்களை மறக்காமல் அவர்களுக்கு பதில் உதவி செய்யுங்கள். பணத்தை கையாள்வதில் கவனம் தேவை. புதிய உத்யோகத்துக்கான முயற்சி பலன் தரும். வயதில் பெரியவர்களுடன் நட்புக் கொண்டு அவர்களின் அனுபவத்தை பெறுவீர்கள்.


Comments