[Untitled]‎ > ‎

21.06.18- இன்றைய ராசி பலன்..(21.06.2018)

posted Jun 20, 2018, 7:38 PM by Habithas Nadaraja




மேஷம்:குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அரசால் அனுகூலம் உண்டு. பிரபலங்கள் அறிமுகமாவார்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள். 







ரிஷபம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. நட்பு வட்டம் விரியும். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.  







மிதுனம்: எதிர்ப்புகள் அடங்கும். தாயாருடன் வீண் விவாதம் வந்துப் போகும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் புது அனுபவம் உண்டாகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள்.  உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உழைப்பால் உயரும் நாள். 







கடகம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். அதிகார பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களை நம்பி மூத்த அதிகாரி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். வெற்றி பெறும் நாள். 







சிம்மம்:கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். அரைக்குறையாக நின்ற வேலைகள் முடியும். காணாமல் போன முக்கிய ஆவணம் கிடைக்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் திருப்பம் நிறைந்த நாள்.  






கன்னி: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்யோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. நாவடக்கம் தேவைப்படும் நாள்.








துலாம்எடுத்த வேலைகளை முடிப்பதற்குள் அலைச்சல் அதிகரிக்கும். உறவினர், நண்பர்கள் சிலர் நன்றி மறந்து பேசுவார்கள். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்க வேண்டி வரும். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.





விருச்சிகம்:தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புது தொழில் தொடங்கும் முயற்சி வெற்றி அடையும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பர். சிறப்பான நாள்.  







தனுசு: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் சில அறிவுரைத் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.







மகரம்:உங்கள் செயலில் வேகம் கூடும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். சாதித்துக் காட்டும் நாள்.







கும்பம்:சந்திராஷ்டமம் தொடர்வதால் வேலைச்சுமையால் சோர்வாக காணப்படுவீர்கள். அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். எதிர்பார்ப்புகள் தாமதமாகி முடியும் நாள். 






                                        

மீனம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். மனைவி வழியில் ஆதரவுப் பெருகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் உங்களுக்குக் கிடைக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திறமை வெளிப்படும் நாள்..
Comments