[Untitled]‎ > ‎

21.09.18- இன்றைய ராசி பலன்..(21.09.2018)

posted Sep 20, 2018, 6:43 PM by Habithas Nadarajaமேஷம்:  எதையும் சமாளிக் கும் சாமர்த்தியம் பிறக்கும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. பிரபலங்கள் உதவுவார்கள்.பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கிய அறிவுரைத் தருவார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம்: குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். பழைய  பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வுகாண்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் கூடுதல் லாபம்கிடைக்கும். உத்யோகத்தில் திருப்தி கரமான சூழ்நிலை உருவாகும். புத்து ணர்ச்சி பெருகும் நாள். மிதுனம்:சந்திராஷ்டமம் நீடிப்பதால் மனஉளைச்சல் ஏற்படும். நீங்கள் ஒன்று பேசப் போய் மற்றவர்கள் அதை வேறுவிதமாகப் புரிந்துக் கொள் வார்கள்.வாகனத்தை எடுக்கும் முன்எரிபொருள் இருக்கிறதா என பார்த்துக் கொள்ளுங்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் அதிருப்தி அடைவார்கள். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். பொறுமைத் தேவைப்படும் நாள்.   

கடகம்: மற்றவர்களால் செய்ய முடியாத செயற்கரிய காரியங்களையெல்லாம் முடித்துக் காட்டுவீர்கள். பிள்ளைகளின் பொறுப் புணர்வு  அதிகமாகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலா கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையைப் பெறுவீர்கள். நன்மை கிட்டும் நாள்.   
 


சிம்மம்:குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். பிரபலங்களின் நட்புகிடைக்கும். சிலர் உங்கள்உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர் கள். உத்யோகத்தில் உங்களின் உழைப் பிற்கு பாராட்டு கிடைக்கும். தொட்டது துலங்கும் நாள்.  
    


கன்னி: புதிய முயற்சிகள் யாவும் வெற்றியடையும். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் புது சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். புதுமை படைக்கும் நாள். துலாம்:எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். மகளுக்கு நல்ல வரன் அமை யும். கலைப் பொருட்கள்வாங்குவீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஒத்துழைப் பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள். விருச்சிகம்:குடும்பத்தாரின் விருப்பங்களை நிறை வேற்றுவீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள் வீர்கள். சொந்த-பந்தங்கள் தேடி வருவார்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில்செல்வாக்கு உயரும். நினைத்ததை முடிக்கும் நாள்.  தனுசு:கணவன்-மனைவிக் குள் அன்யோன்யம் பிறக் கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள்.அழகு, இளமைக் கூடும். உங்களால்பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரம் சூடுபிடிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். புது அத்தியாயம் தொடங்கும் நாள். மகரம்: ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள்.அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடுவதால் வீண்பழிக்கு ஆளாவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.


கும்பம்:குடும்பத்தினருடன் வீண் விவாதம் வந்துப் போகும். அண்டை, அயலார் சிலரின் செயல்பாடுகளால் கோபம், எரிச்சல் அடைய லாம். யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் சங்கடங்கள் வரும். போராடி வெல்லும் நாள்.  


                                        
மீனம்: துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். உங்களை தவறாக நினைத்துக் கொண்டி ருந்தவர்களின் மனசு மாறும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஒங்கும். சிறப்பான நாள்.
Comments