[Untitled]‎ > ‎

21.10.16- இன்றைய ராசி பலன்..(21.10.2016)

posted Oct 20, 2016, 6:26 PM by Habithas Nadaraja




 

மேஷம்: பேச்சில் முதிர்ச்சி தெரியும். சவால்கள், விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். விருந்தினர்களின் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனத்துடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி உங்கள் கோரிக்கையை ஏற்பார். அனுபவ அறிவால் முன்னேறும் நாள். 




ரிஷபம்: கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலை ச்சல், டென்ஷன், கோபம் யாவும் நீங்கும். குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

  




மிதுனம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் முக்கிய விஷயங்களை நீங்களே நேரடியாக சென்று செய்வது நல்லது. குடும்பத்தாருடன் இணக்கமாக செல்லவும். அடுத்தவர்களை குறைக் கூறிக் கொண்டிருக்காமல் உங்களை மாற்றிக் கொள்ளப் பாருங்கள். செலவினங்கள் அதிகரிக்கும். லேசாக தலை வலிக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.





கடகம்:எடுத்த வேலை களை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்குள்ளாவீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. எதிர்மறை எண்ணங்கள் வரக்கூடும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிப்பீர்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள். 







சிம்மம்: எதிலும் வெற்றி பெறுவீர்கள். எங்குச் சென் றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.  






கன்னி: எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உறவினர், நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். மனைவிவழியில் உதவிகள் கிடைக்கும். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். முயற்சியால் முன்னேறும் நாள். 






துலாம்: கடந்த இரண்டு நாட் களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். உத்யோகத்தில் தைரியமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். திடீர் திருப்பங்கள் நிறைந்த நாள். 








விருச்சிகம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் எதை யும் திட்டமிட்டு செய்யப் பாருங்கள். குடும்பத்தில் எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுப் பார்க்க வேண்டியிருக்கும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். யாரையும் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். வியாபாரத்தில் பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இடம் பொருள் ஏவல் அறிந்து செயல்படவேண்டிய நாள். 





தனுசு: உங்களின் பலம் பலவீனத்தை உணர் வீர்கள்-. பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர் களால் ஆதாயமும் உண்டு. விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். திறமைகள் வெளிப்படும் நாள். 







மகரம்:
பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர், நண்பர்களின் வருகையால் வீடுகளைக்கட்டும். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். மாறுபட்ட அணுகுமுறையால் சாதிக்கும் நாள். 




கும்பம்:  புதிய திட்டங் கள் தீட்டுவீர்கள். உறவினர் களின் அன்புத் தொல்லை குறையும். நீண்ட நாள் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். நட்பு வட்டம் விரியும். அநாவசியச் செலவுகளை கட்டுப்படுத்துவீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். புதுமை படைக்கும் நாள். 








மீனம்: எதிர்பார்த்தவை களில் சில தள்ளிப் போனாலும், எதிர்பாராத ஒரு வேலை முடியும். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டி களை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். உழைப்பால் உயரும் நாள்.
Comments