[Untitled]‎ > ‎

22.02.18- இன்றைய ராசி பலன்..(22.02.2018)

posted Feb 21, 2018, 6:00 PM by Habithas Nadaraja




மேஷம்: மாலை 4.45 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் உணர்ச்சிவசப்படாமல்  அறிவுபூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் பணிகளை போராடி முடிக்கவேண்டி வரும். மாலைப் பொழுதிலிருந்து தடைகள் உடைப்படும் நாள்.







ரிஷபம்:குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். முக்கிய கோப்புகளை கையாளும் போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் சுமாரான லாபம் கிட்டும். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகள் வந்து செல்லும். மாலை 4.45 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள். 







மிதுனம்:கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். நெடுநாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வீட்டை புதுப்பிக்க திட்டமிடுவீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக் கையை ஏற்பர். சிறப்பான நாள். 







கடகம்:தவறு செய்பவர்களை தட்டி கேட்பீர்கள். உடன்பிறந்தவர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களை சந்தித்து எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் பாராட்டுவார்கள். சிந்தனைத் திறன் பெருகும் நாள்.  







சிம்மம்:புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் பெரிய பொறுப்புகள் தேடி வரும். சாதித்துக் காட்டும் நாள். 







கன்னி:மாலை 4.45 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் திட்டமிடாத செலவுகளும், பயணங்களும் குறுக்கிட்டாலும் சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும் நாள். 







துலாம்:குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங்கள் வந்து போகும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்று கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதை கூடும். மாலை 4.45 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்எச்சரிக்கை தேவைப்படும் நாள். 







விருச்சிகம்: கனிவாக பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். உங்களால் மற்றவர்கள் பயனடைவார்கள். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அமோகமான நாள். 







தனுசு:குடும்ப வருமானத்தை உயர்த்த புது வழி பிறக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு கிட்டும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை புரிந்து கொள்வீர்கள். புது நட்பு மலரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். புதுமை படைக்கும் நாள். 







மகரம்: எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். சகோதரி உதவுவார். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். உத்யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். நன்மை கிட்டும் நாள். 







கும்பம்:குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சனைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். மனைவி வழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சேமிக்க வேண்மென்ற எண்ணம் வரும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் பாராட்டப்படுவீர்கள். நினைத்ததை முடிக்கும் நாள்.  






                                        

மீனம்:சுறுசுறுப்புடன் செயல்பட்டு தேங்கிக் கிடந்த வேலைகளை முடிப்பீர்கள். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். மனசாட்சி படி செயல்படும் நாள்..
Comments