[Untitled]‎ > ‎

22.03.17- இன்றைய ராசி பலன்..(22.03.2017)

posted Mar 21, 2017, 7:00 PM by Habithas Nadaraja



 
மேஷம்: கணவன்-மனைவிக் குள் நெருக்கம் உண்டாகும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் இன்று முடியும். பிரபலங்கள் உதவுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திடீர் யோகம் கிட்டும் நாள்.






ரிஷபம்: இன்று மாலை 6.30 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் புதிய முயற்சி கள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக் கும். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் உங்களைப் பற்றி வதந்திகள் வரும். நாவடக்கம் தேவைப்படும் நாள்.






மிதுனம்: குடும்பத்தில் ஆரோக்யமான விவாதங் கள் வந்து போகும். மனைவி வழி உறவினர்கள் மதிப் பார்கள். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். தாயார் ஆதரித்து பேசுவார். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். மாலை 6.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் முன்எச்சரிக்கை தேவைப்படும் நாள்.






கடகம்: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வு களைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்களின் நட்பு கிட்டும். வழக்கு சாதகமாகும். அரசால் அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அமோகமான நாள்.







சிம்மம்: குடும்ப வரு மானத்தை உயர்த்த முற்படுவீர்கள். பழைய கடனை பைசல் செய்வீர்கள். நண்பர்கள் உதவுவார்கள். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத் தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். கனவு நனவாகும் நாள்.








கன்னி: எதிர்ப்புகள் அடங்கும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். புது வேலை அமையும். அரசு காரியங்கள் விரைந்து முடியும். வியாபாரத் தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை தாண்டி முன்னேறுவீர்கள். உழைப்பால் உயரும் நாள்.






துலாம்உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்வீர் கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். தைரியம் கூடும் நாள்.







விருச்சிகம்: குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். விலை உயர்ந்த ஆபரணம் வாங்கு வீர்கள். உறவினர்கள் மதிப்பார்கள். வியா பாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். புதிய பாதை தெரியும் நாள்.







தனுசு: மாலை 6.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் விமர்சனங் களை கண்டு அஞ்சாதீர்கள். குடும்பத்தாரின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளுங்கள். பூராடம் நட்சத்திரக்காரர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். உத்யோகத்தில் அலுவலக ரகசியங்களை வெளியிட வேண்டாம். வளைந்து கொடுக்க வேண்டிய நாள்.






மகரம்: குடும்பத்தில் சின்ன சின்ன வாக்குவாதங்கள் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சகோதர வகையில் அலைச்சல் உண்டு. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் போங்கள். உத்யோகத்தில் சக ஊழியரின் வேலை யையும் சேர்த்துப் பார்க்க வேண்டி வரும். மாலை 6.30 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.






கும்பம்: தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோர் ஒத்துழைப்பார் கள். கைமாற்றாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். பிரபலங்களால் ஆதாயம் உண்டு. வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை சந்திப்பீர் கள். உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.







மீனம்: கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். நினைத்ததை முடிக்கும் நாள்.

Comments
You do not have permission to add comments.
Comments