[Untitled]‎ > ‎

22.06.19- இன்றைய ராசி பலன்..(22.06.2019)

posted Jun 21, 2019, 7:56 PM by Habithas Nadaraja


மேஷம்:எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். நெடுநாட்களாக பார்க்க நினைத்த ஒருவர் உங்களைத் தேடி வருவார். புது முடிவுகள் எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். புகழ், கௌரவம் உயரும் நாள்.







ரிஷபம்:மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும். சாதிக்கும் நாள்.







மிதுனம்:கடந்த இரண்டு நாட்களாக இருந்த அலைச்சல், டென்ஷன் குறையும். குடும்பத்தில் நிம்மதி உண்டு. பாதியில் நின்ற வேலைகள் முடியும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்துப் பேசுவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்து ழைப்பார்கள். புதிய பாதை தெரியும் நாள்.







கடகம்:சந்திராஷ்டமம் தொடங்கியிருப்பதால் சந்தேகப்படுவதை முதலில் நிறுத்துங்கள். குடும்பத்தில் உள்ளவர்கள் யாரும் தன்னைப் புரிந்துக் கொள்ளவில்லை எனஆதங்கப்படுவீர்கள். யாரையும் நம்பிஉறுதிமொழி தர வேண்டாம். வியாபாரத்தில் இழப்புகள் ஏற்படும். உத்யோகத்தில் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ளாதீர்கள். நாவடக்கம் தேவைப்படும் நாள்.






சிம்மம்: சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் நன்மை உண்டு. கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக முடியும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். திறமைகள் வெளிப்படும் நாள்.






கன்னி: குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அதிகாரப்பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்றுவரவுஉயரும். உத்யோகத்தில் சில புதுமைகளைச் செய்து எல்லோரின் கவனத்தையும் ஈர்ப்பீர்கள். அமோகமான நாள்.







துலாம்:புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். நினைத்தது நிறைவேறும் நாள்.







விருச்சிகம்:அரசு காரியங்கள் சாதகமாக முடியும். பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க புது வழி யோசிப்பீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சில சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.







தனுசு:சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும். பிரபலங்களின் நட்பு கிட்டும். தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு சில ஆலோசனைகள் தருவீர்கள். வெற்றிக்கு வித்திடும் நாள்.







மகரம்:கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த பிணக்குகள் நீங்கும். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். கேட்ட இடத் தில் உதவிகள் கிட்டும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படு வீர்கள். வியாபாரத்தில் தள்ளிப் போன ஒப்பந்தம் கையெழுத்தாகும். மனசாட்சி படி செயல்படும் நாள்.







கும்பம்:ராசிக்குள் சந்திரன் தொடங்குவதால் செலவுகளைக் குறைக்க முடியாமல் திணறுவீர்கள். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். சிலர் உங்களை குறைக் கூறினாலும் அதைப் பெரிதாக்க வேண்டாம். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.






                                        
மீனம்:திட்டமிட்ட காரியங்களை அலைந்து முடிக்க வேண்டி வரும். உறவினர், நண்பர்களுடன் விரிசல்கள் வரக்கூடும். வாகனத்தில் கவனம் தேவை. யாரிடமும் உணர்ச்சிவசப்பட்டு பேசாதீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வந்து நீங்கும். உத்யோகத்தில் மேலதிகாரியுடன் மோதல்கள் வேண்டாமே. தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.
Comments