[Untitled]‎ > ‎

22.08.16- இன்றைய ராசி பலன்..(22.08.2016)

posted Aug 21, 2016, 6:22 PM by Habithas Nadaraja
மேஷம்: கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். யாரையும் பகைத்துகொள்ளாதீர்கள்.உத்யோ கத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். இரவு 8.30  மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.  


ரிஷபம்: திட்டமிட்ட காரி யங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். வியாபாரத்தில்  புது வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளைப் பகிர்ந்துக் கொள்வார்கள். சிறப்பான நாள். 
   

மிதுனம்: சொன்ன சொல்லை காப்பாற்று வீர்கள். உறவினர், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வியாபார ரீதியாக சில முக்கியஸ்தர்களை  சந்திப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறும். முயற்சிகள் பலிதமாகும் நாள். 


கடகம்: கணவன்-மனைவிக் குள் மனம் விட்டு பேசு வீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். உடல்  நலம் சீராகும். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். திடீர் திருப்பம்  நிறைந்த நாள். 


சிம்மம்:  இரவு 8.30 மணி வரை சந்திராஷ்டமம் தொடர்வ தால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். நியாயம் பேசப் போய்  பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வேண்டாம். உத்யோகத்தில் மறதியால் பிரச்னை வந்து நீங்கும். இடம் பொருள் ஏவல் அறிந்து  செயல்பட வேண்டிய நாள். 


சிம்மம்: பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. மனைவி வழியில் நல்ல செய்தி வரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள்.  வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் எல்லோரும் மதிக்கும்படி நடந்துக் கொள்வீர்கள். இரவு 8.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால்  எதிலும் கவனம் தேவைப்படும் நாள். 


துலாம்:  குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வி.ஐ.பிகள் நண்பர்களாவார்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்பு களை ஏற்பீர்கள்.  வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி சில சூட்சுமங்களை சொல்லித் தருவார். அமோகமான நாள்.  


விருச்சிகம்: வருங்காலத் திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் விருப்பு, வெறுப்பை அறிந்து அதற்கேற்ப அவர்களை நெறிப்படுத்துவீர்கள். ஆடம்பரச் செலவு
களை குறைத்து சேமிக்கத் தொடங்கு வீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். புதுமை படைக்கும் நாள். 
 

தனுசு: எதிர்ப்புகள் அடங்கும். தாய்வழி உறவினர்களுடன் மோதல்கள் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். சில வேலைகளை விட்டுக்  கொடுத்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்சனை தீரும். உத்யோகத் தில் சூழ்ச்சிகளை தாண்டி அதிகாரியின் ஆதரவை பெறுவீர்கள். தேவைகள்  பூர்த்தியாகும் நாள். 


மகரம்: திட்டவட்டமாக சில முக்கிய முடிவுகள்எடுப்பீர்கள். உடன்பிறந் தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சொத்துப் பிரச்னையில் நல்ல தீர்வு கிடைக்கும்.  வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்ததை முடிப்பீர்கள். தைரியம் கூடும் நாள்.   


கும்பம்: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். அழகு, இளமைக் கூடும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்  கொள்வீர்கள். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் புது அதிகாரி உங் களை மதிப்பார். மனநிறைவு கிட்டும் நாள்.    

மீனம்: இரவு 8.30 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். சிலரின்  தவறுகளை சுட்டிக் காட்டுவதன் மூலம் சச்சரவுகளில் சிக்குவீர்கள். வாக்குறுதியை நிறைவேற்ற போராட வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின்  எண்ணிக்கை குறையும்.



Comments