[Untitled]‎ > ‎

22.08.18- இன்றைய ராசி பலன்..(22.08.2018)

posted Aug 21, 2018, 7:36 PM by Habithas Nadaraja



மேஷம்: குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். உறவினர்கள் உங்களைப் புரிந்து கொள்வார்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை சரி செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் வரும். புத்துணர்ச்சி பெருகும் நாள்.  







ரிஷபம்:  சந்திராஷ்டமம் நீடிப்பதால் எதையும் திட்டமிட்டு செய்யப்பாருங்கள். கணவன் -மனைவிக்குள் ஈகோ பிரச்னைகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் ஒப்பந்தங்கள் தள்ளிப் போகும். உத்யோகத்தில் அதிகாரிகள் குறை கூறுவார்கள். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.







மிதுனம்:பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். தாயாரின் உடல் நிலை சீராகும். கல்யாணப் பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்து கொள்வார்கள். நன்மை கிட்டும் நாள்.   







கடகம்:குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வரும். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள். தொட்டது துலங்கும் நாள். 







சிம்மம்:புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். புதுமை படைக்கும் நாள்.  







கன்னி:கடந்த கால சுகமான அனுபவங்களை, சாதனைகளை அவ்வப்போது நினைத்து மகிழ்வீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாமும் உண்டு. தொழிலில் லாபம் அதிகரிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிட்டும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.







துலாம்:துணிச்சலாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடனபிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்திற்கு ஆதரவுப் பெருகும். வெற்றிக்கு வித்திடும் நாள்.   







விருச்சிகம்:கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை திருப்பித் தருவீர்கள். உறவினர் மதிப்பார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.  








தனுசு:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உணர்ச்சி வசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுக்கப்பாருங்கள். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களால் உங்கள் பெயர் கெடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். பதறாமல் பக்குவமாக செயல்பட வேண்டிய நாள்






மகரம்:கணவன்-மனைவிக்குள் மனஸ்தாபம் வந்து நீங்கும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். வியாபாரத்தில் ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் விட்டுக் கொடுத்துப் போங்கள். அதிகம் உழைக்க வேண்டிய நாள். 







கும்பம்:குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். புது வேலைக் கிடைக்கும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். சிறப்பான நாள்.





                                        

மீனம்:சாதிக்க வேண்டு மென்ற எண்ணம் வரும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். புதுப் பொருள் சேரும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். முயற்சிகள் பலிதமாகும் நாள்.
Comments