[Untitled]‎ > ‎

22.11.18- இன்றைய ராசி பலன்..(22.11.2018)

posted Nov 21, 2018, 7:11 PM by Habithas Nadaraja



மேஷம்:ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் ஓய்வின்றிஉழைக்க வேண்டி வரும்.மனஇறுக்கங்கள் உருவாகும். முக்கிய கோப்புகளை கையாளும்போது அலட்சியம் வேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவது நல்லது.உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். சகிப்புத் தன்மை தேவைப்படும் நாள்.   






ரிஷபம்: கணவன்-மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். உறவினர், நண்பர்கள் உதவி கேட்டு தொந்தரவு தருவார்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் நயமாகப் பேசுங்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வடைவீர்கள். தடைகளை தாண்டி முன்னேறும் நாள்.







மிதுனம்:குடும்பத் தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். சொத்து வாங்குவது குறித்து யோசிப்பீர்கள். எதிர்பாராத சந்திப்புகள் நிகழும்.வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையைமாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் உங்களுக்கு முன் உரிமை தருவார்கள். இனிமையான நாள்.







கடகம்:எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந் தவர்கள் உங்கள் வளர்ச்சிக்கு சாதகமாக இருப்பார்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல்செய்வீர்கள். பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். புகழ், கௌரவம் கூடும் நாள்.  







சிம்மம்:கணவன்-மனை விக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி முடியும். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உடல் நலம் சீராகும்.வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். தடைகள் நீங்கும் நாள். 







கன்னி:சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களின் வேலையையும் சேர்த்துப் பார்க்கவேண்டி வரும். அநாவசியப்பேச்சை தவிர்ப்பது நல்லது. யாரையும் முழுமையாக நம்பி ஏமாறவேண்டாம். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பின்மையால் லாபம் குறையும். உத்யோகத்தில் மறைமுக விமர்சனங்கள் உண்டு. பொறுப்புணர்ந்து செயல்பட வேண்டிய நாள். 





துலாம்:பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். தாய்வழியில் ஆதரவு பெரு கும். வாகனப்பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்து கொள்வீர்கள். உத்யோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். திறமைகள் வெளிப்படும் நாள்.







விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களிடம் பழகும் நண்பர்கள், உறவினர்களின் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். பொதுக் காரியங்கள் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும்படி நடந்து கொள்வீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள். 






தனுசு: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். உறவினர்களின்   அன்புத்  தொல்லை குறையும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். வேற்றுமதத்தவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் பற்று வரவு கணிசமாக உயரும். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். கனவு நனவாகும் நாள்.  







மகரம்: பழைய பிரச்னைகளுக்கு சுமூக தீர்வு காண்பீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். பணப்பற்றாக்குறையை சாமர்த்தியமாக சமாளிப்பீர்கள். புது வேலைக்கு முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.






கும்பம்:குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக்கூடும். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின்  நட்பு  கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடிவருவார்கள். வாகன வசதிப் பெருகும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள்.உத்யோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். வெற்றி பெறும்நாள். 






                                        
மீனம்:குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். அழகு, இளமைக் கூடும்.நீண்ட நாள் பிரச்னைகளுக்குதீர்வு காண்பீர்கள்.நட்பு வட்டம் விரியும். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவால் நினைத்தை முடிப்பீர்கள். உற்சாகமான நாள்.
Comments