[Untitled]‎ > ‎

22.11.19- இன்றைய ராசி பலன்..(22.11.2019)

posted Nov 21, 2019, 4:58 PM by Habithas Nadaraja


மேஷம்: பண வரவு திருப்திகரமாக இருக்கும். அரசு காரியங்கள் சாதகமாக முடியும். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகம் அவர்கள். பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு. உத்தியோகத்தில்  உங்கள் கருத்துக்கு ஆதரவு கிடைக்கும். அமோகமான நாள்.







ரிஷபம்:வருங்கால திட்டத்தில் ஒன்று நிறைவேறும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்குத் தேவையான விசேஷங்களைச் செய்வீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி வரும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்களால்  ஆதாயம் உண்டாகும். உத்தியோகத்தில் திருப்தி ஏற்படும். அனுபவ அறிவால் முன்னேறும் நாள்.






மிதுனம்:தாயாருக்கு மருத்துவ செலவு ஏற்படும். சிறு வயது நண்பர் களின் உதவி கிடைக்கும். பழைய கடனை தீர்ப்பீர்கள். பயணங்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டு. வியாபாரத்தில் அதிரடியான செயல்களால் போட்டிகளை சமாளிக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் நிம்மதி உண்டு. எதிர்பார்ப்புகள் பூர்த்தி ஆகும் நாள்.







கடகம்:துணிச்சலாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள்  உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் சரியாகும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை அறிவீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகள் வந்து சேரும். முயற்சியால் முன்னேறும் நாள்.







சிம்மம்:குடும்பத்தில் குதூகலம் அதிகரிக்கும். புதியவர்கள் நண்பர்கள் ஆவார்கள். தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். வியாபாரத்தில் எதிர் பாராத லாபம் உண்டு. உத்தியோகத்தில் உயர்வு கிடைக்கும். பணவரவு திருத்திகரமாக இருக்கும்.  மகிழ்ச்சியான நாள்.







கன்னி: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிக்கலான சவால்களை எல்லாம் கையில் எடுத்துக் கொண்டு இருக்காதீர்கள். தேவையில்லாமல்  மற்றவர்கள் விஷயங்களில் தலையிட வேண்டாம். வியாபாரத்தில் அவசர முடிவுகளைத் தவிருங்கள். உத்தி யோகத்தில் சக ஊழியர்களிடம் பொறுமை தேவை. கவனமுடன் செயல்பட வேண்டிய நாள்.






துலாம்: மறைமுக விமர்சனங்களும், வீண் அலைச்சலும் உண்டாகும். வீண் கோபத்தைத் தவிர்ப்பது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். உத்தியோகத்தில், சக  ஊழியர்களுடன் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். தடைகளைத் தாண்டி முன்னேறும் நாள்.







விருச்சிகம்:சவாலான விஷயங்களையும், சாமர்த்தியமாகப் பேசி முடிப்பீர்கள். பெற்றோரின் ஆதரவுப் பெருகும். உங்களது நெருங்கி யவர்கள் உங்களுக்கு உதவிக்க ரமாக இருப்பார்கள். வியாபாரத்தில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். நன்மைகள் பல நடக்கும் நாள்.







தனுசு:உணர்ச்சிபூர்வமாகச் செயல்படுவதைத் தவிர்த்து, அறிவுப் பூர்வமாகச் செயல்பட நினைப்பீர்கள். உறவினர்கள் நண்பர்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை நம்பி முக்கிய பொறுப்புக்களை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில், போட்டிகளை எதிர் கொண்டு வெற்றி பெறுவீர்கள். சாதனை செய்யும் நாள்.







மகரம்: கும்பத்தாரின் எண்ணங்களைக் கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பணப்புழக்கம் கணிசமாக உயரும். நீண்ட நாள் பிரார்த் தனையை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும்.  மனசாட்சி படி செயல்படும் நாள்.







கும்பம்:சந்திராஷ்டமம் நடந்து கொண்டு இருப்பதால் சில நேரங்களில் வேண்டா வெறுப்பாகப் பேசுவீர்கள். குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றப் போராட வேண்டி இருக்கும். வியாபாரத்தில் புதியவர்களை நம்பி ஏமாறவேண்டாம். பொறுமை தேவைப்படும்  நாள்.






                                        
மீனம்:தன் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். சகோதர வழியில் நன்மைகள் உண்டு. விரும்பிய பொருட்களை வாங்குவீர்கள். மனைவி வழியில் ஆதாயம் உண்டு. வாகனத்தைச் சரி செய்வீர்கள். வியாபாரத்தில், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும். உத்தியோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும் தன்னம்பிக்கை துளிர் விடும் நாள்.

Comments