[Untitled]‎ > ‎

23.03.20- இன்றைய ராசி பலன்..(23.03.2020)

posted Mar 22, 2020, 6:15 PM by Habithas Nadaraja


மேஷம்:சந்திரன் உங்க ராசி லாப ஸ்தானத்திலும் பின்னர் விரைய ஸ்தானத்திற்கும் மாறுகிறார். இன்று உங்களுக்கு பணவரவுகள் தாராளமாக இருக்கும். கூடவே செலவுகள் வரலாம். உடன் பிறந்தவர்களால் அனுகூலம் உண்டாகும். புதிய சொத்துக்கள் வாங்கும் விஷயத்தில் இருந்த தடை தாமதங்கள் விலகி முன்னேற்றம் ஏற்படும். கடன்கள் ஓரளவு குறையும். இன்று கடினமான காரியத்தை கூட எளிதில் செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். பணிபுரிபவர்களுக்கு மேலதிகாரிகளின் ஆதரவு கிட்டும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் வெற்றி தரும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க.





ரிஷபம்: சந்திரனால் இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரத்தில் தொழிலாளர்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன் ஏற்படும். குடும்பத்தில் சுப செலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் பொறுப்புடன் நடந்து கொள்வார்கள். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் பணி சுமை குறையும். வியாபார ரீதியாக எடுக்கும் புதிய முயற்சிகளில் நன்மைகள் நடைபெறும். உங்க உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.



மிதுனம்:இன்று உங்களின் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். வண்டி வாகனங்களால் எதிர்பாராத திடீர் செலவுகள் உண்டாகும். குடும்பத்தில் பேசும் போது கவனமாக இருங்க கணவன் மனைவி இடையே விட்டு கொடுத்து செல்வதன் மூலம் பிரச்சினைகளை தவிர்க்கலாம். வேலையில் ஏற்படும் பணிச்சுமையை உடன் பணிபுரிபவர்கள் பகிர்ந்து கொள்வர். இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சல் கூடும். குடும்பத்தில் விட்டு கொடுத்து சென்றால் பிரச்சினைகளை தவிர்க்கலாம். நண்பர்கள் வழியாக உதவிகள் கிடைக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். ஆலய வழிபாடு மனதிற்கு அமைதியை தரும்.




கடகம்:இன்று உங்களின் உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் காலதாமதமாகும். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. உணவு விஷயத்தில் கட்டுபாடு தேவை. வெளியில் வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாகவும் எச்சரிக்கையுடனும் செல்வது நல்லது. இன்று நீங்கள் செய்யும் செயல்களில் தடை தாமதங்கள் ஏற்படலாம். உங்கள் ராசிக்கு மாலை வரை சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனம் தேவை. மதியத்திற்கு பிறகு மன அமைதி உண்டாகும். உடல் ஆரோக்கியம் சீராகும். பணவரவு தாராளமாக கிடைத்து தேவைகள் பூர்த்தியாகும்.





சிம்மம்:இன்று குடும்பத்தில் எதிர்பாராத சுப செலவுகள் ஏற்படலாம். பிள்ளைகளின் கல்விக்கான வங்கி கடன் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் தாமதமின்றி கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் மறையும். கொடுத்த கடன் கைக்கு வந்து சேரும். இன்று உங்கள் ராசிக்கு மாலைக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் எதிர்பாராத வீண் விரயங்கள் ஏற்படலாம். வியாபாரத்தில் பெரிய தொகையை முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது. வெளி இடங்களில் அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்ப்பது உத்தமம்.




கன்னி:இன்று எந்த ஒரு காரியத்தையும் துணிச்சலோடு செய்து முடிக்கும் ஆற்றல் உண்டாகும். வேலையில் உழைப்பிற்கேற்ற ஊதிய உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும். வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். வீட்டு தேவைகள் பூர்த்தியாகும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கும். இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். எதிரிகளின் பலம் குறைந்து உங்கள் பலம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அவர்கள் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். வீட்டிலேயே வேலை செய்பவர்கள் ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுங்க. உங்க ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.




துலாம்:இன்று பிள்ளைகளால் மன உளைச்சல் ஏற்படலாம். குடும்பத்தில் நிம்மதியற்ற சூழ்நிலை உண்டாக கூடும். தொழிலில் பணியாட்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் சிலருக்கு இடமாற்றத்துடன் கூடிய உயர்வுகள் கிடைக்கும். இன்று உங்களுக்கு மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். நினைத்த காரியம் நினைத்தபடி நிறைவேறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு தகுதிக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் பெருகும்.




விருச்சிகம்: இன்று குடும்பத்தில் பெரியவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரத்தில் எதிர்பாராத விரயங்கள் ஏற்படலாம். சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். திடீர் வெளியூர் பயணம் செல்லும் வாய்ப்பு அமையும்.இன்று உங்களுக்கு வீண் மனக்குழப்பங்கள் உண்டாகும். உறவினர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பணிபுரிபவர்களுக்கு வேலைபளு சற்று அதிகரிக்கும். எதிலும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது.




தனுசு:இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். திருமண பேச்சுவார்த்தைகளில் இருந்த தடைகள் நீங்கும். நண்பர்களின் சந்திப்பால் அனுகூலம் உண்டாகும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்களின் சேமிப்பில் இருந்த பணத்தை உங்களின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்யுங்கள். இன்று நீங்கள் எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். பணவரவுகள் சிறப்பாக இருக்கும். அரசு வழியில் எதிர்பார்க்கும் கடன் உதவி கிட்டும். புதிய நபரின் அறிமுகம் ஏற்படும். சுப முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் உண்டாகும். ஆன்மீக காரியங்களில் ஈடுபட்டு மன அமைதி அடைவீர்கள்




மகரம்:வீட்டில் இன்று பிள்ளைகளால் சிறு சிறு மனஸ்தாபங்கள் ஏற்படும். குடும்பத்தில் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். பெண்கள் பொறுமையுடன் இருப்பது நல்லது. இன்று உங்களுக்கு உடல்நிலை மிக சிறப்பாக அமையும். வியாபாரத்தில் செலவுகள் கட்டுகடங்கி இருக்கும். புதிய நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் வெற்றி தரும். உத்தியோகத்தில் சிலருக்கு மேலதிகாரிகளால் நன்மைகள் நடைபெறும்.






கும்பம்:இன்று உங்களுக்கு எதிர்பாராத பணவரவு கிடைக்கும். வீட்டில் பெரியவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். வேலையில் இதுவரை எதிரிகளால் இருந்த தொல்லைகள் குறையும். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க வேண்டிய நிலை வரும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது தெம்பை கொடுக்கும். உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும் என்றாலும் கவனமாக இருங்க.





                                        
மீனம்: இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைய தாமதமாகும். உத்தியோக ரீதியான பயணங்களால் அலைச்சல் வீண் விரயங்களை சந்திக்க நேரிடும். என்பதால் வீட்டை விட்டு வெளியே போகாமல் இருப்பதே நல்லது. உறவினர்கள் உதவியால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருந்தாலும் தேவைகள் அனைத்தும் நிறைவேறும். குடும்பத்தினருடன் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் தேவை. நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க நன்றாக சாப்பிடுங்க.
Comments