[Untitled]‎ > ‎

23.10.19-இன்றைய ராசி பலன்..(23.10.2019)

posted Oct 22, 2019, 6:38 PM by Habithas Nadaraja


மேஷம்:பழைய இனிய சம்பவங்கள் நினைவுக்கு வரும். சகோதரி உதவுவார். எவ்வளவு பணம் வந்தாலும் பற்றாக்குறை நீடிக்கும். யோகா, தியானம் எனமனம் செல்லும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். உத் யோகத்தில் மறுக்கப்பட்ட உரிமைகள்  கிடைக்கும். சிந்தனைத் திறன்பெருகும் நாள்.ரிஷபம்:துணிச்சலான முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறை காட்டுவார்கள். சொத்துப் பிரச்னை யில் நல்ல தீர்வு கிடைக்கும். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர் கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நிறைவான நாள்.   மிதுனம்:குடும்பத்தில் கல கலப்பான சூழல் உருவாகும். விரும்பிய பொருட்களை வாங்கிமகிழ்வீர்கள். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியா பாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங் களை முழுமையாக நம்புவார். மனசாட்சி படி செயல்படும் நாள்.கடகம்:மதியம் 12.30 மணிவரை ராசிக்குள் சந்திரன்இருப்பதால் உணர்ச்சிவசப் படாமல் இருங்கள். தடைப்பட்ட வேலையை மாறுபட்ட அணுகுமுறையால் முடித்துக் காட்டுவீர்கள். சிலவற்றிற்கு உங்கள் அவசர முடிவுகள் தான் காரணம் என்பதை உணர்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் ஓரளவு வேலைச்சுமை குறையும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.


சிம்மம்:கணவன்-மனைவிக்குள் அனுசரித்துப் போவது நல்லது. யாரையும் பகைத்துக் கொள்ளாதீர்கள். சகோதர வகையில் மனத்தாங்கல் வரும். சிறுசிறு விபத்துகள் ஏற்படக்கூடும். வியாபாரத் தில் ஓரளவு லாபம் வரும். மதியம் 12.30மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழை வதால் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.  கன்னி: குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். பழைய பிரச்னைகளை தீர்ப்பீர்கள். வியாபாரத்தில் புது ஒப் பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்களை கலந்தா லோசித்து முக்கிய முடிவுகள் எடுப்பார்கள். சிறப்பான நாள்.துலாம்:தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவாகப் பேசத் தொடங்குவார்கள். பிரியமானவர்களுக் காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திடீர் யோகம் கிட்டும் நாள்.விருச்சிகம்:உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். வியாபாரத்தில் சிலதந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். சாதித்துக் காட்டும் நாள்.தனுசு:மதியம் 12.30 மணி வரைசந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய கோப்புகளை கையா ளும் போது அலட்சியம் வேண்டாம். சொந்த பந்தங் களால் அன்புத் தொல்லைகள் உண்டு. பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர் கள். வியாபாரத்தில் வசூல் மந்தமாக இருக்கும். உத்யோகத்தில் மறைமுகப் பிரச்னைகளை சமாளிப்பீர்கள். மாலையில் மகிழ்ச்சி தொடங்கும் நாள்.


மகரம்:  கணவன் மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். புதியவர் கள் அறிமுகமாவார்கள். தாய்வழி உறவினர்கள் ஒத்துழைப்பார்கள். வியாபாரம் சுமாராக இருக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி ஆதரிப்பார். மதியம் 12.30 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் நிதானம் தேவைப்படும் நாள்.கும்பம்:கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பாசம் அதிகரிக்கும். வாக னத்தை சீர் செய்வீர்கள். கண்டும் காணாமல் இருந்தவர்கள் வலிய வந்து பேசுவார்கள். வியாபாரத்தில் புது இடத்திற்கு கடையை மாற்றுவீர்கள்.  உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதி சயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். காரியம் சித்தியாகும் நாள்.


                                        
மீனம்: குடும்பத்தில் வருமானத்தை உயர்த்தமுற்படுவீர்கள். அக்கம் பக்கம் வீட்டாரின் ஆதரவுப் பெருகும். உங்களைச் சுற்றியிருப் பவர்களின் சுயரூபத்தை புரிந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். நினைத் தது நிறைவேறும் நாள்.
Comments