[Untitled]‎ > ‎

23.11.16- இன்றைய ராசி பலன்..(23.11.2016)

posted Nov 22, 2016, 5:32 PM by Habithas Nadaraja 

மேஷம்: புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் வருங்காலம் குறித்து யோசிப்பீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். அக்கம் -பக்கம் வீட்டாரின் ஆதரவு பெருகும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். கனவு நனவாகும் நாள்.

 

     
.  

ரிஷபம்: மனதிற்கு பிடித்தவர்களை சந்திப்பீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களால் வீண் செலவுகள் வந்து போகும். புது வேலைக் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் பிரச்னை தீரும். அலுவலகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.மிதுனம்:  குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்னைகளுக்கு முக்கிய தீர்வு காண்பீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. உறவினர்கள் மதிப்பார்கள். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்றுத் தீரும். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். வெற்றி பெறும் நாள்.


  
கடகம்: கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். எதிர்பாராத சில வேலைகள் முடியும். உறவினர்களால் உதவிகள் உண்டு. விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில சூட்சுமங்களைப் புரிந்துக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். திடீர் யோகம் கிட்டும் நாள்.


 
சிம்மம்: மாலை 6 மணி வரை ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் ஒன்றுக்கு மேற்பட்ட வேலைகளை இழுத்துப் போட்டு பார்க்கக் கூடும். சில நேரங்களில் வெறுப்பாக பேசுவீர்கள். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம். புது முதலீடுகளை தவிர்க்கவும். வியாபாரத்தில் ரகசியங்களை வெளியிட வேண்டாம். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் தாமதமாக கிடைக்கும். போராட்டமான நாள்.


கன்னி: குடும்பத்தில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. எதிர்பார்த்த பணம் தாமதமாகும். ஆடம்பரச் செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளை எதிர்த்துப் பேச வேண்டாம். மாலை 6 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் நிதானம் தேவைப்படும் நாள்.


துலாம்:குடும்பத்தாருடன் மனம் விட்டு பேசுவீர்கள். வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் மேலதிகாரி பாராட்டுவார். இனிமையான நாள்.
விருச்சிகம்: எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உறவினர்கள், நண்பர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்பார். அதிகார பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் போட்டிகளை எதிர்கொண்டு வெற்றி காண்பீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். சாதிக்கும் நாள்.தனுசு: குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். நீண்ட நாள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும். நட்பு வட்டம் விரியும். உடல் நலம் சீராகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் உதவுவார்கள். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.மகரம்: 
இன்றும் மாலை 6 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் வேலைச்சுமையால் உடல் அசதி, மனச்சோர்வு வந்து நீங்கும். கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் வந்து நீங்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். உத்யோகத்தில் அவசர முடிவுகள் எடுக்க வேண்டாம். தர்மசங்கடமான சூழல்களை சமாளிக்க வேண்டிய நாள்.
கும்பம்: சகோதர வகையில் பயனடைவீர்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும்.  மனைவி வழியில் நல்ல செய்தி உண்டு. ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் புது பொறுப்புகள் தேடி வரும். மாலை 6 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் எதிலும் எச்சரிக்கை தேவைப்படும் நாள்.மீனம்: கனிவான பேச்சால் காரியம் சாதிப்பீர்கள். உறவினர்கள், நண்பர்களால் ஆதாயம் உண்டு. மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். செல்வாக்குக் கூடும் நாள்.
Comments